BB Tamil 7: கேப்டன் டவுன் டவுன்.. போர்க்கொடி தூக்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!
சென்னை: பிக்பாஸ் தமிழ் 7 ஷோவில் இந்த வாரம் பூர்ணிமா ரவி கேப்டனாக மாறியுள்ளார். இந்த சீசனின் முதல் பெண் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்த சீசனில் விஜய், சரவணன், யுகேந்திரன் ஆகியோர் கேப்டன்களாக இருந்த நிலையில் தற்போது பூர்ணிமா ரவி கேப்டனாக மாறியுள்ளார்.

அவரது கேப்டன்சி சரியில்லை என்று தற்போதே சக போட்டியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: பிக்பாஸ் தமிழ் கடந்த 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது 7வது சீசனில் நுழைந்துள்ளது. கடந்த 1ம் தேதி இந்த சீசன் சிறப்பான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் 22ம் நாளில் நிகழ்ச்சி களமிறங்கியுள்ளது. இன்றைய தினம் வீட்டு பணி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் தோற்பவர்கள் வீட்டை துடைப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். இதற்காக கால்பந்து விளையாடப் போகிறீர்கள் என மாயா கூறினார்.
உட்கார்ந்தபடி கால்பந்து: இதையடுத்து மணிசந்திரா மற்றும் விஷ்ணு விஜய் இருவரும் உட்கார்ந்தபடி கால்பந்து ஆடினார்கள். இதற்கு அம்பயராக பூர்ணிமா ரவி இருந்தார். அவரின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையில், பிரதீப் ஆண்டனி, தலைமை சரியில்லை என்று கூறினார். பூர்ணிமா ரவி சரியில்லை, சீட்டிங் என்று மணிசந்திரா கூற, இதைக் கேட்டு பூர்ணிமா ஷாக்காவதாக இன்றைய ப்ரமோவில் காணப்பட்டது. ஆனால் அவர்கள் சொல்வதுதான் சரி என்பது போல மற்ற போட்டியாளர்களும் ரியாக்ட் செய்ததை பார்க்க முடிந்தது.
கேப்டன் டவுன் டவுன்: தொடர்ந்து அனைவரும் கேப்டன் டவுன் டவுன் என்ற கோஷத்தை அவர்கள் எழுப்பினார்கள். இதையடுத்து பிரதீப் ஆண்டனியிடம் நீ ஏன் பிக்பாஸ் ஆகக்கூடாது என்று கேட்டு சண்டையை துவக்கினார் விஷ்ணு. மேலும் பிரதீப்பிற்கு கேமே தெரியவில்லை என்றும் அவர் கூறியதை பார்க்க முடிந்தது. இவ்வாறு இன்றைய நாளின் இரண்டாவது ப்ரமோ அமைந்திருந்தது. தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து 3 பேர் வெளியேறியுள்ளனர்.
வைல்ட் கார்ட் என்ட்ரி: அனன்யா மற்றும் விஜய் இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் பவா செல்லதுரை தானே விரும்பி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். வரும் வாரத்தில் மாயாவை வெளியேற்ற போட்டியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் வினுஷா தேவி வெளியேற வேண்டும் என்பதே பார்வையாளர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில் வரும் வாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் உள்நுழையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அர்ச்சனா, கானா பாலா உள்ளிட்டவர்கள் இடம்பெறவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூர்ணிமாவிற்கு எதிரான கோஷம்: இந்த சீசனில் அதிகமாக பிரபலமாகாத போட்டியாளர்களை கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி களமிறங்கியுள்ளது. இதனால் முதல் நாளிலிருந்தே போட்டியாளர்கள் தங்களது அடிதடிகளை கையாளத் துவங்கினார். ஆக்சிஜன் எமர்ஜென்சி டாஸ்கில் விஜய் மற்றும் பிரதீப் இருவரும் மோதிக் கொண்டதை பார்க்க முடிந்தது. இதையடுத்து கடந்த வாரத்தில் விஜய் போட்டியிலிருந்து எலிமினேட் ஆனார். இதையடுத்து இந்த வாரத்தின் முதல் நாளிலேயே டாஸ்க்கை துவங்கியுள்ளனர் போட்டியாளர்கள். பூர்ணிமாவிற்கு எதிராகவே பேசத் துவங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











