BB tamil 7: பிரதீப் -கூல் சுரேஷ் இடையில் வலுக்கும் மோதல்.. நடுவுல இவர் வேறயா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தனது 7வது சீசனின் 30வது நாளை எட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் 5 பேர் வெளியேறியுள்ளனர். மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் நிகழ்ச்சியில் நுழைந்துள்ளனர்.
இதனிடையே தற்போது வைல்ட் கார்ட் மூலம் புதிய போட்டியாளர்கள் நுழைந்துள்ள நிலையில் நிகழ்ச்சி மேலும் களைகட்டி வருகிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில் கடந்த 1ம் தேதி நிகழ்ச்சியின் 7வது சீசன் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கிய நிலையில் முதல் வாரத்திலேயே அனன்யா குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார். தொடர்ந்து பவா செல்லதுரை நிகழ்ச்சியிலிருந்து தானே விரும்பி விலகிய நிலையில் அடுத்தடுத்து விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன் என இதுவரை 5 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
வைல்ட் கார்ட் என்ட்ரி: இதனிடையே கடந்த வாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தினேஷ், அர்ச்சனா, கானா பாலா உள்ளிட்ட ஐந்து பேர் நிகழ்ச்சியில் நுழைந்துள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சி மேலும் சுவாரஸ்யமடைந்துள்ளது. பிக்பாஸ், ஸ்மால்பாஸ் என இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ச்சியின் துவக்கம் முதலே இருந்து வருகிறது. இது தற்போது புதிய போட்டியாளர்களுடன் மேலும் வீரியமடைந்துள்ளது.
30வது நாளில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: நிகழ்ச்சியில் நுழைந்தவுடன் தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டவர்கள் ஸ்மால்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளை தினேஷ் மேற்கொண்டார். இதனால் நிகழ்ச்சியின் கேப்டன் பூர்ணிமா ரவியையும் அவர் பகைத்துக் கொண்டார். தொடர்ந்து இவர்களிடையே வாக்குவாதங்களும் நடைபெற்றன. இந்நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 30வது நாளை எட்டியுள்ளது. இதையடுத்து அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன.
மோதிக் கொண்ட பிரதீப் -கூல் சுரேஷ்: காலையில் வெளியான ப்ரமோவில் நடத்தப்பட்ட புதிய டாஸ்க்கில் கூல் சுரேஷ் பிரதீப்பை கலாய்க்க அவர்களுக்குள் சண்டை மூண்டது. இதையடுத்து தான் பிக்பாஸ் வீட்டை விட்டு போவதாக கூல் சுரேஷ் உடைமைகளுடன் வெளியேறியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இவர்களின் சண்டை தொடர்ந்ததை இரண்டாவது ப்ரமோவில் பார்க்க முடிந்தது. கூல் சுரேஷை சில்லறை பய என்று பிரதீப் வம்பிழுக்க, அவர் என்ன சில்லறை பையனா என்று விஷ்ணு சப்போர்ட் செய்தார்.

ஒருமையில் பேசிய பிரதீப்: மேலும் கூல் சுரேஷை வாடா போடா என்றெல்லாம் பிரதீப் கூற சண்டை முற்றியது. மோசமான வார்த்தைகளால் இருவரும் மாற்றி மாற்றி திட்டிக் கொள்ள அடிதடிக்கு வித்திட்டது. இருவரையும் சமாதானப்படுத்த மற்ற போட்டியாளர்கள் முயன்ற நிலையில், கோபத்தில் கூல் சுரேஷ் பொங்கினார். அசிங்க அசிங்கமாக பேசினாலும் சும்மா இருப்பீர்களா என்று அவர் கேட்பதாக தற்போது வெளியான ப்ரமோவில் காணப்படுகிறது. பிரதீப் சாரி கேட்க வேண்டும் என்று பெண் போட்டியாளர் ஒருவர் அறிவுறுத்த, உன் வேலையை பார்த்துக் கொண்டு போம்மா என்று பிரதீப் கோபத்துடன் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











