BB tamil 7: ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மாயா.. கடுப்பில் கேப்டன் பூர்ணிமா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனை விறுவிறுப்பாக கொடுத்து வருகிறது.

இன்றைய தினம் 26வது நாளில் பிக்பாஸ் 7 சீசன் நுழைந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் 15 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.

இந்த வார இறுதியில் நடக்கவுள்ள வைல்ட் கார்ட் என்ட்ரியில் மேலும் 5 பேர் நிகழ்ச்சியில் இணையவுள்ளனர்.

Vijay TVs Bigg boss tamil 7 show entered today in 26th day and next to next promos released

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் நம்பர் ஒன் நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில் கடந்த 1ம் தேதி இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் துவங்கியுள்ளது. பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 26ம் நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே குறைவான வாக்குகளை பெற்று அனன்யா எலிமினேட் ஆனார்.

அடுத்தடுத்த எலிமினேஷன்: தொடர்ந்து உடல்நிலையை காரணம் காட்டி பவா செல்லதுரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிலையில் இரண்டாவது வாரத்தில் எலிமினேஷன் இல்லாமல் இருந்தது. தொடர்ந்து கடந்த வாரத்தில் விஜய் எலிமினேட் ஆனார். முன்னதாக வினுஷா மற்றும் அபிநயா எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த நிலையில் பிரதீப் உள்ளிட்டவர்களுடன் சண்டையிட்ட விஜய் எலிமினேட் செய்யப்பட்டார். இவர் மோசமான வார்த்தைகளை பிரயோகித்ததற்காக இரண்டாவது வாரத்திலேயே ஸ்ட்ரைக் கார்ட் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நித்தம் ஒரு டாஸ்க்: இதனிடையே நித்தம் ஒரு டாஸ்க், நித்தம் ஒரு பிரச்சினைகளுடன் பிக்பாஸ் 7 போட்டி களைகட்டி வருகிறது. தற்போது நடந்து முடிந்துள்ள கோல்டன் ஸ்டார் டாஸ்க்கில் ஒவ்வொருவரின் குடும்பத்தினரும் பேசும் வீடியோக்களை பார்த்து சக போட்டியாளர்கள் லைக் அல்லது டிஸ்லைக் செய்தனர். இதில் அதிகமான லைக்குகளை பெற்றவர்களே வெற்றியாளர் என்பதே டாஸ்க். இந்த டாஸ்க் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு: அந்த வகையில் தன்னுடைய நீண்ட கால நண்பர் யுகேந்திரனுக்காக வீடியோவில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு பேசியிருந்தார். இதுபோல ஜோவிகா, சுரேஷ் உள்ளிட்டவர்களின் வீடியோக்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காட்சிப் படுத்தியிருந்தனர். இதனிடையே தற்போது நடைபெற்றுள்ள ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க்கில் தோற்றால் பிக்பாஸ் வீட்டிற்கு வீட்டில் சமைக்கப்படும் உணவு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த டாஸ்கில் பிக்பாஸ் குடும்பத்தினர் தோற்றனர்.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்: இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் தனக்கு சாப்பாடு வேண்டும் என்றும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு தான் வர விரும்புவதாகவும் மாயா கூறியுள்ளார். இதையடுத்து தன்னுடைய பெட் சகிதம் வலது காலை எடுத்து வைத்து அவர் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். இதனால் கடுப்பான கேப்டன் பூர்ணிமா, அவர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு மாயா தன்னுடைய பேச்சை கேட்காமல் போனதாக சண்டையிடுகிறார்.

Vijay TVs Bigg boss tamil 7 show entered today in 26th day and next to next promos released

வாக்குவாதம் செய்த மாயா: இதையடுத்து தன்னை பூர்ணிமா ஏன் தடுக்கிறார் என்று மாயா பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தற்போதைய ப்ரமோவில் காணப்படுகிறது. மேலும் தன்னை பார்த்துக் கொள்ளவே தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்து வாக்குவாதம் செய்கிறார். இதையடுத்து மாயா எப்படி சாப்பிடுகிறார் என்பதை தான் பார்க்கிறேன் என்று பூர்ணிமா ரவி சவால் விடுகிறார். தொடர்ந்து பிரச்சினைகளுக்கிடையில் சுவாரஸ்யத்தை கூட்டி வருகிறது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X