Bigg boss tamil 7: பிக்பாஸ் நாமினேஷன்.. மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக் கொண்ட விசித்ரா -தினேஷ்!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் 85வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரு தினங்களாக வாரயிறுதி எபிசோடில் பங்கேற்று பேசிய கமல்ஹாசன், ஃபிரீஸ் டாஸ்க் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு ஹவுஸ்மேட்சிடம் கேள்வி எழுப்பினார். இதனிடையே இன்றைய தினம் எவிக்ஷனுக்கான நாமினேஷன் செய்யப்பட்டு அதற்கான போட்டியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இதில் மாயா, நிக்சன், தினேஷ், மணி, ரவீனா மற்றும் விஷ்ணு ஆகியோர் தற்போது நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக பிக்பாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதையொட்டி போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் கூறிக் கொண்டதையும் சண்டை போட்டுக் கொண்டதையும் பார்க்க முடிந்தது. குறிப்பாக விசித்ரா மற்றும் தினேஷ் இடையிலான மோதல் மேலும் அதிகரித்ததையும் இந்த பிரமோவில் பார்க்க முடிந்தது. கடந்த வாரத்தில் ஃபிரீஸ் டாஸ்க் மூலம் நிகழ்ச்சி களைகட்டியது. நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து அவர்களுக்கு ஆச்சர்யங்களையும் அறிவுரைகளையும் தந்ததை பார்க்க முடிந்தது.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 85வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனின் ஆங்கரிங்கும் இந்த சீசனில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவர் நிகழ்ச்சியில் பாகுபாட்டுடன் நடந்துக் கொள்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பிரதீப்பின் எலிமினேஷன் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஆனால் மாயாவின் செயல்பாடுகளை அவர் ஏன் கேள்விக்குட்படுத்துவதில்லை என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
விக்ரம் எலிமினேஷன்: டைட்டில் வின்னர் என்று தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கூறிவந்த சரவண விக்ரம் நேற்றைய தினம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அவரை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலாய்த்ததை பார்க்க முடிந்தது. கப் வாங்கிய பின்பு என்ன பேச வேண்டும என்று தயார் செய்து வைத்திருந்த அவர், இப்போ என்ன செய்யபோகிறார் என்று கமல் விக்ரமிடம் கேள்வி கேட்டிருந்தார். தொடர்ந்து கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று அவரிடம் மறைமுகமாக சான்ஸ் கேட்டார் விக்ரம். இதையடுத்து இப்படியும் சான்ஸ் கேட்கலாமா என்று கமல் கலாய்ப்பு தொடர்ந்தது.
நாமினேஷன் பிராசஸ்: இந்த நிகழ்ச்சி இன்னும் இரு வாரங்களில் என்ட் கார்ட் போடவுள்ள நிலையில் இன்றைய தினம் 85வது நாளின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்ற நிலையில், அர்ச்சனா, தினேஷ், ரவீனா உள்ளிட்டவர்கள் நிக்சனை கைக்காட்டினார்கள். தொடர்ந்து நிக்சனும் இந்த நாமினேஷன் குறித்து பேசியதையும் பார்க்க முடிந்தது. மாயாவை ரவீனா மற்றும் விஷ்ணு நாமினேஷன் செய்கின்றனர். மாயா எலிமினேஷன் கேம் ஆடுவதாக அவர் குற்றம் சாட்ட, தொடர்ந்து மாயா கடுப்பானதை பார்க்க முடிந்தது.
ஆத்திரத்தில் கத்திய மாயா: கேவலமான நாமினேஷன் காரணங்களை கூறுவதாக அவர் மறைமுகமாக விஷ்ணுவை குறிப்பிட்டு பேசினார். அவர் நக்கலாக பேசியதை விஷ்ணு சுட்டிக் காட்டுகிறார். இதையடுத்து தான் அவரை பற்றி பேசவில்லை என்று மாயா கூறுகிறார். இதனால் அவர்களுக்குள் முட்டிக் கொள்கிறது. தொடர்ந்து ப்பே என்று மாயா கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது பிரமோவில் தன்னை எப்போதும் தினேஷ் தப்பாகவே பேசுவதாக விசித்ரா குற்றம் சாட்டுகிறார். அவர் பேசும் வார்த்தைகள் நம்மை உசுப்பி விடுவதாக பதிலுக்கு தினேஷ் கூறியதையும் இந்த பிரமோவில் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











