Bigg boss 7: கூல் சுரேஷுக்கு பின்னாடி இவ்வளவு சோகமா.. கடந்து வந்த பாதையை பகிர்ந்த பிக்பாஸ் டீம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது 7வது சீசனை சிறப்பாக நடத்தி வருகிறது.

கடந்த 1ம் தேதி இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் மிகப்பெரிய பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது. இன்றைய தினம் 16ம் நாளில் நிகழ்ச்சி அடியெடுத்து வைத்துள்ளது.

முதல் நாளிலிருந்தே வித்தியாசமான டாஸ்க்குகள், விவாதங்கள், பிரச்சினைகள், சண்டைகள் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி.

Vijay TVs Bigg boss tamil 7 show today promo released

16வது நாளை எட்டிய பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ், 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது 7வது சீசனை சிறப்பாக நடத்தி வருகிறது. கடந்த 1ம் தே இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கிய நிலையில் 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தனர். வழக்கமாக ஒரு வாரத்திற்கு பிறகுதான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும். ஆனால் இந்த 7வது சீசனில் அதிகமான பிரபலமான போட்டியாளர்கள் இல்லாத நிலையிலும் நிகழ்ச்சி முதல் நாளிலிருந்தே அடிப்பொலியாக அமைந்தது.

முதல் நாளிலிருந்தே போட்டியாளர்கள் இடையே சண்டை, சச்சரவுகள், விவாதங்கள், பிரச்சினைகள், டாஸ்க்குகள் என நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. பிரதீப், விஷ்ணு, ஜோவிகா, விசித்ரா என போட்டியாளர்கள் அதிகமான கவனத்தை பெற்று வருகின்றனர். முதல் வாரத்திலேயே அனன்யா எவிக்ஷன் ஆன நிலையில், சில தினங்களிலேயே பவா செல்லதுரை தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இதனால் கடந்த வார நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லாத நிலை இருந்தது. ஆனாலும் வார இறுதியில் போட்டியாளர்களை சந்தித்த நிகழ்ச்சியின் ஆங்கர் நடிகர் கமல்ஹாசன், கடந்த வார பஞ்சாயத்துக்களை தீர்த்து வைத்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் நாமினேஷன் ப்ராசஸ் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் உண்மையாக இல்லாத போட்டியாளர்கள் குறித்தெல்லாம் சக போட்டியாளர்கள் கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 16வது நாளை எட்டியுள்ளது. இதன் அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 2வது ப்ரமோவில் தாங்கள் கடந்துவந்த பாதை குறித்த பகிர்வுகளை போட்டியாளர்கள் செய்திருந்தனர். இதில் நடிகர் யுகேந்திரன், தன்னுடைய பின்னால் உள்ள வாசுதேவன் என்ற பெயர் தனக்கு பல இடங்களில் சங்கடங்களை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதேபோல அடுத்தடுத்த போட்டியாளர்கள் தாங்கள் கடந்துவந்த பாதையை பேசினர்.

Vijay TVs Bigg boss tamil 7 show today promo released

இதனிடையே இறுதியாக பேசிய கூல் சுரேஷ், தான் 8வது படிக்கும்போது மிகவும் கஷ்டப்பட்டதாகவும் தினந்தோறும் காலையில் பேப்பர் போட போவேன் என்றும் கூறினார். இதனால் சக போட்டியாளர்கள் கண் கலங்கியதையும் பார்க்க முடிந்தது. அடுத்தடுத்து சுசித்ரா, ஜோவிகா உள்ளிட்டவர்களும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசியுள்ளதை இந்த ப்ரமோவில் பார்க்க முடிந்தது. இன்றிரவு நிகழ்ச்சியில் இதுகுறித்து முழுமையாக ரசிகர்கள் பார்க்க முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X