Bigg boss tamil 7: மனிதாபிமானத்தோட நடந்துக்கங்க.. அர்ச்சனா அப்பாவிடம் குட்டு வாங்கிய விக்ரம்!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனின் 79வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.
இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியான நிலையில் இன்றைய தினம் பிரிஸ் டாஸ்க் நடைபெற்றதை பார்க்க முடிந்தது.
இதையடுத்து போட்டியாளர்களின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததையும் இந்த பிரமோக்கள் மூலம் காண முடிந்தது. இதையடுத்து நிகழ்ச்சியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களையும் பார்க்க முடிந்தது.
பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் நடைபெற்று வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 79வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இதையடுத்து அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன.

ஃபிரீஸ் டாஸ்க்: இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டது. இதையொட்டி போட்டியாளர்களின் பெற்றோர் இந்த நிகழ்ச்சியின் என்ட்ரி ஆகியுள்ளனர். பூர்ணிமா, அர்சசனா, விக்ரம் உள்ளிட்டவர்களின் பெற்றோர் இந்த நிகழ்ச்சியில் என்ட்ரி ஆன நிலையில், நீண்ட நாட்களை கடந்து அவர்களை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் உணர்ச்சிவசப்பட்டு அவர்களை கட்டிக் கொண்டதை பிரமோவில் பார்க்க முடிந்தது.
மனிதாபிமானத்தோட நடந்துக்கங்க: இதையடுத்து தன்னுடைய மகள் ஏதாவது மனம் நோகும்படி பேசியிருந்தார் சாரி என்று பூர்ணிமாவின் அம்மா குறிப்பிட்டதையும் பிரமோவில் காண முடிந்தது. தொடர்ந்து அவர் மற்ற ஹவுஸ்மேட்சுடன் இணைந்து பாடல் ஒன்றிற்கு ஆட்டம் போட்டதையும் பார்க்க முடிந்தது. இதனிடையே விக்ரமை பார்த்து மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று அர்ச்சனாவின் அப்பா கூறியதும் நிகழ்ச்சியில் நடந்துள்ளது.
அர்ச்சனாவை புண்படுத்திய விக்ரம்: இந்த வீடியோவில் விக்ரமை பார்த்து பேசும் அர்ச்சனாவின் அப்பா, அர்ச்சனாவிற்கும் விசித்ராவிற்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டபோது, அர்ச்சனா கண்கலங்கியபடி பேசியதை அக்ஷயாவுடன் இணைந்து விக்ரம் கலாய்த்ததை குறிப்பிட்டு இந்த சூழலில் அவருக்கு ஆறுதலாக இல்லாவிட்டாலும் அர்ச்சனாவை மேலும் புண்படுத்தும்வகையில் விக்ரமின் செயல்பாடு இருந்ததாகவும் இதை பார்த்து தான் மிகவும் வருத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கம் கொடுத்த விக்ரம்: இதையடுத்து அவருக்கு விளக்கம் கொடுக்க முயற்சி விக்ரம், அந்த சூழ்நிலையை லேசாக்கவே தான் முயன்றதாகவும் ஆனால் அது தனக்கு எதிராகவே மாறியதாகவும் குறிப்பிட்டார். வாழ்க்கையில் அனைவரும் தங்களின் வருமானத்திற்காக செயல்படும் நிலையிலும் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அர்ச்சனாவின் அப்பா தொடர்ந்து பேசுவதாக இந்த வீடியோவில் அமைந்துள்ளது. விளையாட்டிற்காக இதை செய்தாலும் அது தவறானது என்றும் அவர் விக்ரமிற்கு சுட்டிக் காட்டுகிறார்.


Click it and Unblock the Notifications











