Bigg boss tamil 7: நீங்களுமா.. கமலின் கேள்வியால் நொந்து நூடுல்சான பிக்பாஸ்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தன்னுடைய 7வது சீசனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கிய நிலையில், தொடர்ந்து 7வது ஆண்டாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.
இன்றைய தினம் 14வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இருந்த நிலையில் இருவர் வெளியேறியுள்ளனர்.

விஜய் டிவியின் பிக்பாஸ் 7 ஷோவின் அடுத்தடுத்த ப்ரமோக்கள்: உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கிய நிலையில், தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. கடந்த 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி தன்னுடைய 7வது சீசனை பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியுள்ளது. கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றியை அடுத்து கடந்த ஆண்டில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. துவக்கத்தில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இடையில் விலகிய நிலையில், நடிகர் சிம்பு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தொடர்ந்தார். இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் 7 சீசனை கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவருக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி துவங்கிய நிலையில், இன்றைய தினம் நிகழ்ச்சி 14வது நாளை எட்டியுள்ளது. நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் கடந்த வாரத்தில் அனன்யா எலிமினேட் செய்யப்பட்டார். தொடர்ந்து தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி எழுத்தாளர் பவா செல்லதுரையும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை 16ஆக மாறியுள்ளது. இதையடுத்து இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த வார நிகழ்ச்சியில் பல்வேறு பிரச்சினைகள், சவால்களை போட்டியாளர்கள் எதிர்கொண்டனர். கடந்த வாரத்தில் அனன்யா வெளியேறிய நிலையில், விசித்ரா, விஜய் உள்ளிட்டவர்களுக்கு கமல்ஹாசன் அவர்களது நடவடிக்கையை அடுத்து சில
எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். விஜய்க்கு ஸ்ட்ரைக் கார்ட் அலர்ட்டும் கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வாரமும் பல பஞ்சாயத்துக்களை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் கமல் உள்ளார்.
நேற்றைய தினம் ஸ்மால் பாஸ் போட்டியாளர்களின் திடீர் ஸ்ட்ரைக் குறித்து பேசிய கமல்ஹாசன், இன்றைய தினம் கேப்டன் சரவணனின் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். மேலும் பிக்பாஸிடமே அவரது நடவடிக்கைகள் குறித்து நேரடியாக கேள்விகளை கேட்டார். தான் சரவணனிடம் கேள்விக் கேட்டாலும் அவர் பிக்பாசிடம் கேட்டுத்தான் தனக்கு பதிலளிப்பார் அதனால் பிக்பாசிடமே தான் கேள்வி கேட்பதாக கமல் நகைச்சுவையுடன் பேசினார்.
இதனால் போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் அரங்கத்தினரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால் பிக்பாஸோ, இந்த வாரம் முழுக்க தன்னிடம் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் நீங்களுமா என்றும் நொந்து நூடுல்சான கதையை வெளிப்படுத்தினார். இதையடுத்து பேசிய கமலோ, அவரையே அனைவரும் நோகடித்துள்ளதாக வெளிப்படுத்தினார். தொடர்ந்து பிக்பாஸ் ரிலாக்சாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு பிக்பாஸ் கமலுக்கு நன்றி தெரிவித்தார். இவ்வாறாக தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரமோவில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











