Bigg boss 7: 75வது நாள் கொண்டாட்டம்.. நிக்சன்-ஐசு சீக்ரெட்டை வெளிப்படுத்திய மாயா.. கோபப்பட்ட நிக்சன்

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 தற்போது அதிரடியாக 75வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இன்றைய தினம் 75வது நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றைய தினம் திடீரென மிட் வீக் எலிமினேஷனை அறிவித்த பிக்பாஸ் அனன்யாவை எலிமினேட் செய்துள்ளார்.

Vijay TVs Bigg boss tamil 7 shows 15th December 2023 episode promo released

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் அதிரடியாக நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டு தொடர்ந்து இரு பிக்பாஸ் வீடுகள், டபுள் எவிக்ஷன், விசித்ரா -ஜோவிகாவின் கல்வி குறித்த சர்ச்சைகள், பிரதீப் ரெட் கார்ட் எலிமினேஷன் என பல்வேறு சர்ச்சை பின்னணிகளுடன் பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 75வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

டஃப் கொடுக்கும் போட்டியாளர்கள்: மற்ற சீசன்களை போல இல்லாமல் பிரச்சினைகளை தொடர்ந்து எதிர்கொள்ள வரிந்துக் கட்டிக் கொண்டு இந்த சீசனின் போட்டியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். வைல்ட் கார்ட் என்ட்ரிக்களாக நிகழ்ச்சியில் 7 பேர் நுழைந்துள்ள நிலையில் அர்ச்சனா, தினேஷ் அதில் போட்டியின் மையமாக தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு டஃப் கொடுக்கும்வகையில் விசித்ரா, விஷ்ணு உள்ளிட்டவர்களும் காணப்படுகின்றனர்.

மிட் வீக் எலிமினேஷன்: கடந்த வாரத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக எலிமினேஷன் இல்லாத நிலையில் இந்தவாரம், இறுதிவரை கூட காத்திருக்க முடியாமல் மிட்வீக் எலிமினேஷனை இந்த நிகழ்ச்சி அரங்கேற்றியுள்ளது. அதில் கார்னர் செய்யப்பட்டு நேற்றைய தினம் அனன்யா வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வார இறுதியில் மேலும் இரு எலிமினேஷன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி துவங்கி இன்றைய தினம் 75வது நாளை எட்டியுள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன.

75வது நாள் கொண்டாட்டம்: இன்றைய தினம் வெளியாகியுள்ள முதல் பிரமோவில் 75வது நாள் கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் அதிரடியாக ஆட்டம் போடு சாங்கிற்கு ஆட்டம் போட்டதை காண முடிந்தது. அனைவரும் குதூகலத்துடன் இருந்த நிலையில் பாசிட்டிவ்வாக இருப்பதை காண முடிந்ததாக மணி கூறியுள்ளார். மேலும் இந்த பிரமோவில் பேசிய விஷ்ணு இது தன்னுடைய டிரீம் ஷோ என்று கூற, அவரை கூல் சுரேஷ் கலாய்ப்பதாக அமைந்துள்ளது.

உணர்ச்சிவசப்பட்ட போட்டியாளர்கள்: தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் ஹவுஸ்மேட்ஸ் தங்களது பர்சனல் வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளனர். நிகழ்ச்சியில் முதலாவதாக பேசிய விஜய் வர்மா, தன்னுடைய பேமிலி தன்னுடைய சிறிய வயதிலேயே பிரிக்கப்பட்டதாக வருத்தத்தை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து பேசிய அர்ச்சனா, தான் எப்போதும் பாதுகாப்பான இடத்திலேயே இருந்த நிலையில், பிக்பாஸ் போன்ற ஒரு சூழலில் தான் பொருந்தியுள்ளது மிகப்பெரிய விஷயம் என்று பதிவு செய்துள்ளார்.

நிக்சன் -ஐசு குறித்த சீக்ரெட்: தொடர்ந்து பேசிய விசித்ரா, அர்ச்சனா ஒருமுறை தன்னை அவர் நம்பவில்லை என்று கூறியபோது தனக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக வருத்தத்தை பகிர்ந்தார். தொடர்ந்து பேசிய மாயா, தான் நிக்சன் மற்றும் ஐசு குறித்த ஒரு சீக்ரெட்டை பகிர்வதாக கூறினார். இதையடுத்து தன்னுடைய சீக்ரெட்டை அவர் ஏன் சொல்கிறார் என்று கோபத்துடன் நிக்சன் கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து அவர் ஏன் இப்படி செய்கிறார் என்று பதிலுக்கு கேள்வி எழுப்புவதாக இன்றைய எபிசோட் பிரமோ காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X