BB Tamil 7: விஜய்க்கு ஸ்ட்ரைக் கொடுத்த விவகாரம்.. கண்டனத்தை பதிவு செய்த உலகநாயகன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 7வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.
18 போட்டியாளர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட துவக்கவிழா நிகழ்ச்சியுடன் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி துவங்கியது.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக துவக்கிவைத்த உலகநாயகன் கமல்ஹாசன், நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களையும் ரசிகர்களுக்கு சிறப்பான முன்னுரையுடன் அறிமுகம் செய்துவைத்தார்.
விஜக்கு ஸ்ட்ரைக் கொடுத்த விவகாரத்தில் விளக்கம் அளித்த கமல்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு, தொடர்ந்து 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் 7வது சீசன் பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவக்கப்பட்டது. நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களை ரசிகர்களுக்கு சிறப்பான முன்னுரையுடன் அறிமுகம் செய்து வைத்தார் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன்.

இந்த நிகழ்ச்சிக்காக இந்த சீசனில் கமல்ஹாசனுக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்றாற்போல இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான கமலை பார்க்க முடிவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நிகழ்ச்சி இன்றைய தினம் 7வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அடுத்தடுத்து இரு ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் வெளியான முதல் ப்ரமோவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் மோசமாக பேசிய கேப்டன் விக்ரமிற்கு ஸ்ட்ரைக் கார்ட் கொடுத்துள்ளார் கமல்ஹாசன். முன்னதாக தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மஞ்சள் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தன்னை செருப்பு காலோடு உரசிப்போன பிரதீப்பிற்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் முன்னதாக கேப்டன் விஜய் பேசியிருந்தார்.

தன்மீது அன்பு கொண்ட பலர் வெளியில் இருப்பதால் பிரதீப் வெளியில் சென்றால் எதுவும் நடக்கலாம் என்று மிரட்டலாக பேசியிருந்தார் விஜய். இந்த விஷயத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவருக்கு ஸ்ட்ரைக் கார்ட் கொடுத்த கமல், இதேபோல மூன்றுமுறை செய்தால் அவர் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறும் சூழல் உருவாகும் என்றும் எச்சரித்திருந்தார். இதனிடையே விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஸ்ட்ரைக் கார்ட் போலவே மற்றொரு நபருக்கும் கொடுக்க வேண்டியது உள்ளது என்று மாயா கமெண்ட் செய்துள்ளார்.

இதுகுறித்து தற்போது இரண்டாவது ப்ரமோவில் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இதற்கான காரணத்தை விஜய்யிடம் சொல்ல கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கமல்ஹாசன், ஒருவரின் சோகத்தை கிண்டலடித்து பேசியது மிகுந்த கண்டனத்திற்குரிய விஷயம் என்று கூறியுள்ளார். இதை வெளிப்படையாக கூற விரும்பவில்லை என்றும் தான் கூறவரும் விஷயம் விஜய் மற்றும் அவருடன் இருந்து கிண்டலடித்த மற்றவர்களுக்கு புரியும் என்றும் அவர்களுக்கு புரிந்தால் போதும் என்றும் கமல் மேலும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கமலின் இந்த விளக்கத்திற்கு ஏராளமான ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சும்மா விட்டிருந்தாலே ஸ்ட்ரைக் கார்ட்டோடு போயிருக்கும். சப்போர்ட் செய்கிறேன் என்ற பேரில் விஜய்யின் அனைத்து க்ரைம்களும் வெளியில் தெரியும்படி மாயா செய்துவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் மாயா பல்ப் வாங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். விஜய்க்கு தொடர்ந்து மாயா ஜால்ரா அடிப்பதாகவும் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











