பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பாரபட்சம் குறித்து பேசிய கமல்.. லஞ்சம் மாதிரி என்று குற்றச்சாட்டு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது.
கடந்த 6 சீசன்களை போலவே கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இந்த முறை போட்டி மிகவும் கடுமையாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ஹரீஷ் கல்யாணும் இந்த கருத்தையே வெளிப்படுத்தினார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் தற்போது 7வது சீசனில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது 7வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்கள் என அடுத்தடுத்து கலவையான விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வருகின்றனர். ஒருபுறம் இதுவும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
63வது நாளில் என்ட்ரி: கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கத்துடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 63வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதன் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. முன்னதாக வெளியான முதல் பிரமோவில் எலிமினேஷன் குறித்து ஹவுஸ்மேட்சிடம் கருத்துக் கேட்கிறார் கமல்ஹாசன். தொடர்ந்து அவர்களின் கருத்துக்களை கேட்டவுடன் எவிக்ஷனை படிக்கப் போகிறார். தொடர்ந்து இது எப்படி சாத்தியம் என அவரே வியக்கும் வகையில் பிரமோவில் காணப்படுகிறது.
அடுத்தடுத்த பிரமோக்கள்: இதனிடையே தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் நடிகர் கமல்ஹாசன் ஃபேவரிட்டிசம் குறித்து ஹவுஸ்மேட்சிடம் பேசியுள்ளார். இவ்வாறு யாரெல்லாம் நடந்துக் கொள்கின்றனர் என அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மாயா, பூர்ணிமா உள்ளிட்டவர்கள் மீது ஹவுஸ்மேட்ஸ் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து இவ்வாறு பாரபட்சமாக நடந்துக் கொள்வது குறித்து கமல்ஹாசன் மிகவும் அதிரடி கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
கமல்ஹாசன் கேள்வி: இந்தப் பிரமோவில் முன்னதாக யாருடைய பாரபட்சம் இந்த போட்டிக்கு பிரச்சினையாக அமைந்துள்ளது என்று அவர் கேள்வி கேட்க, அர்ச்சனா மற்றும் தினேஷ் கைக்காட்டப்படுகின்றனர். மேலும் நிகழ்ச்சியில் பேசிய ஜோவிகா, தினேஷ் மணிக்கு ஃபேவராக நடந்துக் கொள்வதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய தினேஷ் நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமா இவ்வாறு நடந்துக் கொள்வதாக குறிப்பிடுகிறார். தொடர்ந்து பேசும் அர்ச்சனா, மாயா ஹெட்டாகவும் அவரது ஃபாலோயர்கள் அவர் சொல்வதையெல்லாம் செய்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
லஞ்சம் போன்றது ஃபேவரிட்டிசம்: தொடர்ந்து பேசும் மாயா, பூர்ணிமாவை தான் பாதுகாப்பதாகவும் அன்பு தன்னை நிஜமாகவே தடுப்பதாகவும் குறிப்பிடுகிறார். இதையடுத்து பேசிய கமல், ஃபேவரிட்டசித்தின் டேஞ்சர் என்பது திறமை இல்லாதவர்களையும் தூக்கி வைப்பதுதான் என்று சுட்டிக் காட்டினார். இது கிட்டத்தட்ட லஞ்சம் போன்றது கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்று அவர் பிரமோவில் குறிப்பிடுகிறார். இதையொட்டி இன்றைய எபிசோட் ரசிகர்களை அதிகமாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











