Bigg boss 7 show: எந்த இடத்தில் சொருகுவீங்க.. கமல் கேட்ட கேள்வி.. ஆடிப்போன நிக்சன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 இன்றைய தினம் 69வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அர்ச்சனாவை பார்த்து சொருகிடுவேன் என்று நிக்சன் பேசியிருந்தார். இதனிடையே, வாரயிறுதி எபிசோடான இன்றைய தினம் இதுகுறித்து கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது எபிசோடில் சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி சிறப்பான துவக்க விழாவுடன் துவங்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 69வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. 2 மாதங்களை தாண்டி தற்போது இந்த நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நிகழ்ச்சியின் பல விஷயங்கள் தற்போது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பி வருகின்றன.
தொடரும் எலிமினேஷன்கள்: இந்த நிகழ்ச்சியில் துவக்க வாரத்திலிருந்தே எலிமினேஷன்கள் தொடர்ந்து வந்தன. மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாகவும் 7 போட்டியாளர்கள் இதுவரை நிகழ்ச்சியில் நுழைந்துள்ளனர். இதனிடையே பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இன்றைய தினம் வாரயிறுதி எபிசோடின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கமல்ஹாசன் தோன்றி பல விஷயங்களை கேள்வி கேட்டுள்ளார்.
கமல்ஹாசன் குற்றச்சாட்டு: முன்னதாக வெளியான முதல் பிரமோவில் பேசிய கமல்ஹாசன், பிக்பாஸ் போட்டியாளர்கள் தரமில்லாமல் விளையாடி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த தரம் குறித்து விசாரிக்கும் நேரம் வந்துள்ளதாகவும் இன்றைய தினம் அந்த விசாரணை நடக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெளியில் தண்ணீர் வெளியேறினால் தரை தெரியும் ஆனால் பிக்பாஸ் போட்டியாளர்களின் விளையாட்டில் தரம் தெரியாது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நிக்சனிடம் கேள்வி கேட்ட கமல்: தொடர்ந்து இரண்டாவது பிரமோவில் நிக்சன் குறித்து அர்ச்சனா உரிமைக்குரல் எழுப்பியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து நிக்சனை பார்த்து கமல் கேள்வி கேட்டுள்ளார். சொருகுவது என்றால் எங்கே சொருகுவீர்கள் என்று கேட்ட கமல், வயிறு, மார்பு மற்றும் கண்ணை காட்டி கேள்வி எழுப்புவதையும் இந்த 2வது பிரமோவில் பார்க்க முடிந்தது. என்ன அர்த்தத்தில் நிக்சன் அந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்பது குறித்து தனக்கு தெரிய வேண்டும் என்றும் கமல் கோபத்துடன் பேசியதை இந்த 2வது பிரமோவில் காண முடிந்தது.
ஸ்ட்ரைக் கார்ட் கொடுத்த கமல்: தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், அவர் சொருகுதற்கு சரியான இடத்தை தான் பார்த்து வைத்துள்ளதாக ஸ்ட்ரைக் கார்ட்டை காட்டியுள்ளார். இதனால் நிக்சன் செய்வதறியாது திகைத்ததையும் இந்த பிரமோவில் பார்க்க முடிந்தது. முன்னதாக மழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதன் காரணமாக தற்போது எலிமினேஷனில் இருந்து நிக்சன் தப்பிப்பார் என்பது தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











