BB 7 show: இரண்டாவது வார நாமினேஷன்.. யாரு அதிக வாக்கு வாங்கியிருக்காங்கன்னு தெரியுமா?

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தன்னுடைய 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு தற்போது 7வது சீசனை துவங்கியுள்ளது.

இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி 8வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக பல ட்விஸ்ட்களை சந்தித்துள்ளது.

Vijay TVs Bigg boss tamil 7 shows new and second promo of this day released

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது வார நாமினேஷன் ப்ராசஸ் தற்போது நடந்துள்ளது. இதுகுறித்த ப்ரமோவை சேனல் தன்னுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

எட்டாவது நாளை எட்டிய பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ், கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு, தற்போது 7வது சீசனில் நுழைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 1ம் தேதி பிரம்மாண்ட துவக்கவிழாவுடன் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 18 பேரை நிகழ்ச்சியில் சிறப்பான முன்னுரையுடன் ஆங்கர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனை குறைவாக இம்ப்ரஸ் செய்பவர்கள் இரண்டாவது வீட்டிற்கு செல்லும் விதிமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த வீட்டில் ஏசி சிறப்பாக உள்ளதாகவும் கொசுக்கடி இல்லாமல் நிம்மதியாக தூங்க முடிவதாகவும் போட்டியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த வார பஞ்சாயத்துக்களை பேசி கடந்த இரு தினங்களில் நிகழ்ச்சியை களைகட்ட செய்தார் ஆங்கரும் நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன். கடந்த சில தினங்களுக்கு முன்பு மிகப்பெரிய பஞ்சாயத்தாக மாறிய ஜோவிகாவின் படிப்பு குறித்து அவர் நிகழ்சசியில் பேசினார். தொடர்ந்து கேப்டன் விஜய்யின் கிண்டலுக்கு ஸ்ட்ரைக் கார்ட் கொடுத்து அவரை எச்சரித்திருந்தார். மேலும் பல விஷயங்களையும் நிகழ்ச்சியில் விவாதித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 8வது நாளில் நுழைந்துள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில், இந்த பிக்பாஸ் வீட்டின் இரண்டாவது வார நாமினேஷன் ப்ராசஸ் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, போட்டியாளர்கள் பலரும் விஷ்ணுவை நாமினேட் செய்த நிலையில், அவர் மொத்த வீடுமே தனக்கு எதிராக உள்ளதாக கூறுவதாக ப்ரமோ அமைந்துள்ளது.

மேலும் மாயா, அக்ஷயா போன்றவர்களையும் அடுத்த வாரத்திற்காக நாமினேட் செய்தை பார்க்க முடிந்தது. அக்ஷயா நிகழ்ச்சியில் சுற்றுலா வந்ததை போல நடந்து கொள்வதாக விஷ்ணு தெரிவித்திருந்தார். கடந்த வாத்தில் அனன்யா எவிக்ஷன் ஆன நிலையில் இந்த வாரத்தில் யார் ஆவார்கள் என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் தொடர விருப்பமில்லை என்று எழுத்தாளர் பவா செல்லதுரை கூறியுள்ளதும் கவனத்தை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X