Bigg boss 7: சப்பாத்தி குருமா.. சீக்கிரமா வருமா.. சிக்கனை வைத்து கொளுத்திப் போட்ட ஃபைட்.. 2வது ப்ரமோ
சென்னை: விஜய் டிவியின் பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிக்பாஸ் தனது 7வது சீசனை நேற்று முன்தினம் பிரம்மாண்ட துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். கூல் சுரேஷ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நுழைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களையும் சிறப்பான இன்ட்ரோவுடன் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன்.

சிக்கனை வைத்து சண்டையை துவங்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்: விஜய் டிவியின் பிரம்மாண்ட மற்றும் முதன்மையான ஷோவான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு, 6 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்து தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. வழக்கம்போல இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்காக அவருக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், இந்த சீசன், பல்வேறு வித்தியாசமான முயற்சியுடன் மேலும் ஏராளமான ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.
இதற்கெல்லாம் முன்னோட்டமாக, வழக்கமாக இருப்பதை போல இல்லாமல், இந்த சீசனில் ஒரே வாசலில் இரு வீடுகள் என்ற வகையில் நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. இதில் 6 போட்டியாளர்கள், தனித்து ஒரு வீட்டில் வைக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியில் அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. விசித்ரா, வினுஷா, ஜோவிகா, பவா, செல்லதுரை, பிரதீப், கேப்டன் விஜய் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியின்மூலம் ஒருங்கிணைந்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் அன்றைய நிகழ்ச்சிக்கான மூன்று ப்ரமோக்கள் வெளியாகவுள்ள நிலையில், இன்றைய தினம் காலையிலேயே முதல் ப்ரமோ மூலம் விசித்ரா, கேப்டன் விஜய், பிரதீப் இடையில் மோதல் வெடித்ததை காண முடிந்தது. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோ வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இதில் கேப்டன் விஜய், பிரதீப் இடையே உணவு விஷயத்தில் மோதல் ஏற்படுவதை பார்க்க முடிந்தது.
சப்பாத்திக் குருமாவை திட்டமிடாமல் செய்தது ஏன் என்று பிரதீப் கேள்வி எழுப்ப, நேற்றைய தினம் அனைவரும் இணைந்து தீர்மானித்திருந்தபோது பிரதீப் என்ன செய்துக் கொண்டிருந்தார் என்று கேப்டன் விஜய் கேள்வி எழுப்புவதாக இன்றைய இரண்டாவது ப்ரமோவில் காணப்படுகிறது. மேலும் அனைவரும் பேசிக் கொண்டிருந்தபோது பிரதீப் டவலாட்டிக் கொண்டிருந்ததாகவும் அதனால் அவரிடம் எதையும் கேட்க முடியாது என்றும் கேப்டன் விஜய் தீர்க்கமாக கூறுகிறார்.
இதனால் கடுப்பாகும் பிரதீப், தனக்கு தேவையான உணவை கரும்பலகையில் எழுதிவிட்டு செல்கிறார். அன்றைய தினம் தனக்கு சிக்கன் ப்ரை வேண்டும் என்றும் கூறுகிறார். தொடர்ந்து பேசும் கேப்டன் விஜய், டீ, காபி மற்றும் ஸ்நாக்ஸ் மட்டும்தான் கேட்கும்போதேல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதனால் இன்றைய எபிசோட் மிகவும் காட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளிலிருந்தே இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யங்கள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











