Bigg boss tamil 7: அர்ச்சனாவிற்கு குவிந்த பாராட்டுக்கள்.. தன்னுடைய பாயிண்டை பூர்ணிமாவிற்கு கொடுத்து ஷாக்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் அதிரடியாக நடைபோட்டு வருகிறது.

கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழாவுடன் 18 போட்டியாளர்களை கொண்டு இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 74வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது- இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay TVs Bigg boss tamil 7 shows today (14th december 2023) episode promos released

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு ஆண்டுதோறும் வித்தியாசமான போட்டியாளர்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த ஆண்டு 7வது சீசனில் இந்தப் போட்டி என்ட்ரி கொடுத்துள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களை சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கமல்ஹாசன்.

இரு வீடுகள்.. டபுள் எலிமினேஷன்: இந்த ஆண்டு அதிகமான பிரலபங்கள் இல்லாமல் எளிமையாக துவங்கப்பட்டது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி. ஆனால் நிகழ்ச்சியில் இரு வீடுகள், அடுத்தடுத்து டபுள் எலிமினேஷன் என வித்தியாசம் காட்டியது. மேலும் முதல் வாரத்திலேயே தன்னுடைய எலிமினேஷனை துவக்கியது. முதல் வாரத்திலேயே குறைவான புள்ளிகளை பெற்று அனன்யா எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்தடுத்த எலிமினேஷன்கள் இருந்த நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரிக்களும் நிகழ்ச்சியில் இருந்தன.

வைல்ட் கார்ட் என்ட்ரிக்கள்: இதில் வைல்ட் கார்ட் என்ட்ரிக்களாக நிகழ்ச்சியில் நுழைந்த தினேஷ், அர்ச்சனா தொடர்ந்து நிகழ்ச்சியில் மாஸ் காட்டி வருகின்றனர். குறிப்பாக அர்ச்சனா மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக மாறியுள்ளார். நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் ரெட்கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்களை கவராது என்று கருதப்பட்ட நிலையில், அவரது இடத்தை அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்டவர்கள் சிறப்பாக நிரப்பினர்.

களைகட்டிய பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: இந்நிலையில் நிகழ்ச்சியில் விஜய் வர்மா, அனன்யா ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்ததும் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த வித்தியாசமான டாஸ்க்குகளுடன், டிக்கெட் டூ பைனல் கான்செப்டையும் இணைத்து பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இந்த வாரம், போட்டியாளர்களுக்கு சினிமாவில் மாஸ் காட்டிய ஒவ்வொரு கேரக்டர்களாக பிக்பாஸ் கொடுத்துள்ளார்.

அர்ச்சனாவின் திமிரு கேரக்டர்: அதன்படி அர்ச்சனாவிற்கு திமிரு படத்தின் ஈஸ்வரி கேரக்டர் வழங்கப்பட்டது. அதை அவர் சிறப்பாக வெளிப்படுத்தினார். திமிரு படத்தின் ஸ்ரேயா நடித்திருந்த ஈஸ்வரி கேரக்டரின் அதே நடை, உடை பாவனைகளை கொண்டுவந்த மிரட்டினார். இதனிடையே இந்த கேரக்டர்களில் மற்ற போட்டியாளர்களை யார் கவர்ந்தது என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதிகமான வாக்குகள் அர்ச்சனாவிற்கே கிடைத்தது. அவரது நடிப்பை அனைவரும் புகழ்ந்து பேசினர்.

அர்ச்சனாவை பாராட்டிய பூர்ணிமா: பூர்ணிமா, மாயா கேங்கிற்கு அர்ச்சனா என்றாலே ஆகாது என்ற நிலை இருக்க, பூர்ணிமாவே அர்ச்சனாவின் ஈஸ்வரி கேரக்டரை புகழ்ந்து பேசியது சக ஹவுஸ்மேட்ஸ் மட்டுமில்லாமல் ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தியது. அந்த அளவிற்கு அர்ச்சனா தன்னுடைய கேரக்டர் மூலம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இந்நிலையில், 74வது நாளான இன்று, நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன.

பூர்ணிமாவிற்கு பாண்ட்ஸ் கொடுத்த அர்ச்சனா: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள நிகழ்ச்சியின் இரண்டாவது பிரமோவில், டிக்கெட் டூ பைனலில் பங்கேற்க முடியாத அர்ச்சனா, தன்னுடைய பாயிண்ட்டை யாருக்கு கொடுக்கப் போகிறார் என்று பிக்பாஸ் கேள்வி எழுப்பினார். இதையடுத்து சிறிது யோசித்த அர்ச்சனா, அந்த பாயிண்ட்டை தான் பூர்ணிமாவிற்கு வழங்கவுள்ளதாக கூறினார். இதைக்கேட்டு பூர்ணிமா அதிகமாகவே அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இதையடுத்து மாயாவும் ஆத்திரத்துடன் ஏதோ பேச, பகையாளிகளை போல உலவிவந்த பூர்ணிமா மற்றும் அர்ச்சனா இருவரும் கட்டியணைத்துக் கொள்வதாக தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X