Bigg boss tamil 7: எங்க காதுல பூ வைக்க முடியாது.. பூர்ணிமாவிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய கமல்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது.

கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது 76வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது.

வாரயிறுதி நாளான இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் தன்னுடைய முதல் சீசனை துவங்கிய நிலையில் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது 7வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது. இதன் துவக்கவிழா கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 76வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

Vijay TVs Bigg boss tamil 7 shows today (16th december 2023) episode promos released

அடுத்தடுத்த பிரமோக்கள்: வாரயிறுதி எபிசோடான இதன் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ள நிலையில், இதில் கமல்ஹாசன் நிகழ்ச்சி குறித்து பேசியதை பார்க்க முடிந்தது. முதல் பிரமோவில் பேசிய கமல்ஹாசன், கலையுணர்வு வன்மத்தையும் கோபத்தையும் தணிக்கும் என்று குறிப்பிட்டார். அதற்கான சாயல்கள் வீட்டில் தெரிந்தது போல இருந்ததாகவும் பேசிய கமல், அந்த வேஷம் கலைந்ததுடன் மற்றவர்களை எப்படி காலி செய்வது என்ற எண்ணம் ஹவுஸ்மேட்சிடம் காணப்பட்டதாகவும் கூறினார்.

கமல் காட்டமான கேள்வி: வார ஆரம்பத்தில் பூசிக்கொண்ட அந்த பூச்சு நிஜப்பூச்சு இல்லையா என்றும் கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், வேஷம் கலைந்துவிட்டதோ என்றும் சந்தேகத்தை கிளப்பினார். தொடர்ந்து இதுகுறித்து விசாரிப்போம் என்றும் கமல் கூறியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து தற்போது இரண்டாவது பிரமோவிலும் கமல்ஹாசன் பேசியுள்ளார். இந்த பிரமோவில் தன்னை கமல்ஹாசன் ஸ்கிப் செய்து சென்றதாக பூர்ணிமா கூறிய நிலையில், அது விபத்தல்ல என்பதை அவருக்கு கமல் புரிய வைத்தார்.

பூர்ணிமாவை வறுத்தெடுத்த கமல்: பூர்ணிமா என்ன சொன்னாலும் தான் கேட்டுக் கொள்வேன் என்று அவர் எதிர்பார்த்தாரா என்றும் கமல் கேட்டார். தொடர்ந்து பூ கொண்டுவருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறிய கமல், அதை யார் காதில் வைப்பது என்பதை பூர்ணிமாவின் பேச்சை தொடர்ந்தே தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். எங்கள் காதில் பூ வைக்க முடியாது என்று பூர்ணிமாவிடம் கடுமையாக பேசிய கமல், ஏனென்றால் 3 கோடி பேர் இங்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பூர்ணிமாவின் திட்டத்தை அறிந்த கமல்: தான் கேட்கும்போது எதையாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்று பூர்ணிமா திட்டமிடுவதாகவும் அதற்கேற்க செயல்படுவதாகவும் கமல் தொடர்ந்து குற்றம் சாட்ட, ஆனால் தனக்கு அந்த எண்ணம் இல்லை என்று பூர்ணிமா சமாளிக்க, அவர் அதைத்தான் தற்போது செய்து வருவதாகவும் கமல்ஹாசன் சுட்டிக் காட்டுவதாக தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் காணப்படுகிறது. இதையடுத்து கடந்த வாரங்களில் பூர்ணிமாவின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து அவரிடம் கமல் கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X