Bigg boss 7 show: மனம் மாறியதுதான் குற்றம்.. பிக்பாஸ் 7 போட்டியாளர்களிடம் உண்மையை உரக்க சொன்ன கமல்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 ஷோவையும் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் என்ட்ரி கொடுத்து சிறப்பாக நடந்து வருகிறது.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 77வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: கமல்ஹாசனின் தொகுப்பில் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் தொடர்ந்து 7வது சீசனிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் இந்த நிகழ்ச்சி தனது முதல் சீசனை துவங்கிய நிலையில் தொடர்ந்து 6 சீசன்களை அதிரடியாக நிறைவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் துவங்கப்பட்டது. பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நுழைந்தனர்.
தொடர் எலிமினேஷன்: அடுத்த வாரத்திலேயே நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் அனன்யா, குறைவான வாக்குகளை பெற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து விஜய் வர்மா, பிரதீப் உள்ளிட்டவர்கள் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் பிரதீப்பால் பெண்களின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டதாக எழுந்த புகாரையடுத்து ஹவுஸ்மேட்சிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பிரதீப் எலிமினேட் செய்யப்பட்டார்.
அடுத்தடுத்த சுவாரஸ்யங்கள்: தொடர்ந்து இரு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டிய நிலையில், டபுள் எவிக்ஷனும் மிட் வீக் எவிக்ஷனும் இந்த சீசனில் புதிதாக புகுத்தப்பட்டன. இதன்மூலம் நிகழ்ச்சி சுவாரஸ்யமடைந்தது. இருந்தபோதிலும் கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனின் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மல்லுக்கட்ட எப்போதுமே தயாராகவே இருந்ததும் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு மேலும் வலு சேர்த்தது. முதல் வாரத்திலிருந்து ரசிகர்களை கவர்ந்துவந்த கூல் சுரேஷும் தற்போது எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
வாரயிறுதி எபிசோட்கள்: இந்நிலையில் வாரயிறுதி எபிசோடையடுத்து நேற்றும் இன்றும் தொடர்ந்து கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்றுவருகிறார். இன்றைய தினம் நிகழ்ச்சி 77வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் இந்த ஷோவிற்காக தங்களை நல்லபடியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் மனம் மாறவில்லை என்ற வகையல் சக ஹவுஸ்மேட்ஸ்கள் குறித்து பேச கமல் கேட்டார்.
கமல் கேட்ட கேள்வி: இதையடுத்து பேசிய தினேஷ் விசித்ராவை கைக்காட்டினார். தொடர்ந்து பேசிய அர்ச்சனா, மாயா தன்னை வேறு மாதிரி மாற்றிக் கொண்டிருப்பதாக தனக்கு தோன்றுவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய விஷ்ணு, பூர்ணிமா இந்த நிகழ்ச்சிக்காக தன்னை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். வில்லத்தனமாக இருப்பதாக தான் முன்னதாக அவரிடமே கூறியுள்ளதையும் சுட்டிக் காட்டினார். இப்பொழுது மாறியுள்ள பூர்ணிமா ரியல் என்று தனக்கு தோன்றுவதாகவும் கூறினார்.
மனம் மாறியது குற்றம்: நிகழ்ச்சியின் பிரமோவில் தொடர்ந்து பேசிய நிக்சன், தினேஷ் தன்னை நிகழ்ச்சியில் வேறுமாதிரியாக காட்டுவதாக தெரிவித்தார். தொடர்ந்து நிக்சனை மறித்த கமல்ஹாசன், அவர் எப்படி இருக்கிறார் என்று கேள்வி எழுப்புவதாகவும் பதிலுக்கு தெரியவில்லை சார், நான் ஒருமாதிரி இருந்தேன் என்று நிக்சன் கூறுவதாகவும் இந்த பிரமோவில் காணப்படுகிறது. இதையடுத்து பேசிய கமல், குணம் மாறவில்லை என்பதை தான் குற்றமாக சொல்லவில்லை என்றும் மனம் மாறியதுதான் குற்றம் என்றும் கூறுவதாக தற்போதைய பிரமோவில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











