Bigg boss tamil 7: இந்த வார நாமினேஷன்.. காரணங்களுடன் வெளிப்படுத்திய ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் துவங்கப்பட்டு அதிரடியாக நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் 7வது சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இன்றைய தினம் நிகழ்ச்சி 78வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது.

இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ள நிலையில் நிகழ்ச்சியின் நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றதை பார்க்க முடிந்தது.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 6 சீசன்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனிலும் அதிரடி சரவெடியாக அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல ஹவுஸ்மேட்சின் செயல்பாடுகள் மிகுந்த சர்ச்சைகளை ரசிகர்களிடையே ஏற்படுத்து வருகிறது. இந்நிலையில் இந்த 7வது சீசனின் 78வது நாள் எபிசோடான இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

Vijay TVs Bigg boss tamil 7 shows today (18th december 2023) episode promo released

கவனத்தை கவர்ந்த வாரயிறுதி எபிசோட்கள்: கடந்த வாரத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நடிகர் கமல்ஹாசன் வாரயிறுதி எபிசோட்களான நேற்றும், கடந்த சனிக்கிழமையும் பல்வேறு கேள்விகளுக்கு உட்படுத்தியதை பார்க்க முடிந்தது. ரவீனா, பூர்ணிமா, நிக்சன் உள்ளிட்டவர்களை அவர் அதிகமாக வறுத்தெடுத்ததை நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. அவர் வழக்கம்போல மாயாவை அதிகமாக கேள்வி கேட்காதது ஏன் என ரசிகர்களை தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

78வது நாளில் பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: இந்நிலையில் இன்றைய தினத்தின் முதல் பிரமோவில் இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்லப்போகும் போட்டியாளர்கள் குறித்து தேர்வு செய்ய ஹவுஸ்மேட்சிடம் பிக்பாஸ் கேள்வி எழுப்ப, உடனடியாக விசித்ரா, மாயா மற்றும் பூர்ணிமா தனி உலகத்தில் இருப்பதாக செயல்படுவார்கள், அதனால் அவர்களை அனுப்ப தனக்கு விருப்பமில்லை என்று கூறுகிறார். இதைக் கேட்டு கடுப்பான மாயா, தாங்கள் சேர்ந்திருப்பது எந்த வகையிலாவது விசித்ராவை பாதித்ததா என்று ஆத்திரத்துடன் கேள்வி எழுப்புவதாக காணப்படுகிறது.

காட்டமான மாயா.. பதிலடி கொடுத்த விசித்ரா: இதையடுத்து பேசிய விசித்ரா, இருவரும் ஒன்றாக இருந்துக் கொண்டு மற்றவர்களை மைண்ட் செய்ய மாட்டீர்கள் என்று கத்தி கூறுகிறார். இதையடுத்து பூர்ணிமாவிடம் இனிமேல் இருவரும் இடைவெளியை மெயின்டெயின் செய்ய வேண்டும் என்றும் இனிமேல் தன்னிடம் பேசாதே என்றும் மாயா கூறுவதாகவும் இந்த பிரமோவில் அமைந்துள்ளது. தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் இரு நபர்களை சரியான காரணத்துடன் தேர்வு செய்து சொல்லுமாறு பிக்பாஸ் கேட்பதாக அமைந்துள்ளது.

நாமினேஷன் பிராசஸ்: இந்த பிரமோவில் பேசிய விஷ்ணு முன்னதாக காரணங்களுடன் தான் நாமினேஷனை மேற்கொண்டதாகவும் தற்போது நேர்மையான முறையில் தான் இதை சொல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இந்த பிரமோவில் பேசிய நிக்சன், விக்ரம், விஜய் வர்மா, அர்ச்சனா ஆகியோர் ரவீனாவை குறிப்பிடுகின்றனர். தொடர்ந்து பிரமோவில் பேசிய மாயா, ரவீனாவின் ஃபேவரிட்டிசம் நிகழ்ச்சியில் அனைவரையும் பாதிப்பதாக குறிப்பிட்டார்.

இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?: தொடர்ந்து பிரமோவில் விக்ரமை, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா போன்றவர்கள் நாமினேட் செய்துள்ளனர். நிகழ்ச்சியில் விக்ரமின் தனித்தன்மை சிறிதும் வெளிப்படவில்லை என்று விஷ்ணு குற்றம் சாட்டியதையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து விசித்ராவிற்கு எதிராக மாயா, பூர்ணிமா, தினேஷ் ஆகியோர் நாமினேட் செய்தனர். இதனிடையே, விசித்ரா தினேஷை நாமினேட் செய்ததையும் பார்க்க முடிந்தது. இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X