Bigg boss tamil 7: நீங்க டாப் பிளேயர் இல்லையா.. கமல் கேட்ட கேள்வி.. பூர்ணிமா ரியாக்ஷன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு தற்போது 7வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 83வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. வாரயிறுதி நாளான இன்றைய தினம் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பல விஷயங்களை பேசியதை பார்க்க முடிந்தது. கடந்த சில தினங்களாக நிகழ்ச்சியில் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்ட நிலையில் போட்டியாளர்களின் பெற்றோர், குடும்பத்தினர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பாக்கினர். இதுகுறித்து தற்போது கமல்ஹாசன் பேசியுள்ளார்.
இன்றைய தினம் 83வது நாளில் நிகழ்ச்சி என்ட்ரியாகியுள்ள நிலையில் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்களை சேனல் வெளியிட்டுள்ளது. முதல் பிரமோவில் பேசிய கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான அன்பு கொட்டப்பட்டதால் சச்சரவுகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அன்பு கூடினால் சச்சரவுகள் குறையும் என்பதை பாடமாக கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே இரண்டாவது பிரமோவிலும் பேசிய கமல், பிக்பாஸ் வீட்டிற்குள் அவர்களின் பெற்றோர் உறவினர் வந்த நிலையில் அவர்களின் அறிவுரைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 83வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதுவரை 6 சீசன்களை இந்த நிகழ்ச்சி நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது 7வது சீசன் சிறப்பான நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் துவக்க போட்டியாளர்களாக களமிறங்கிய விசித்ரா, பூர்ணிமா, மாயா உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த வாரத்தில் விசித்ரா, விக்ரம் மற்றும் ரவீனா இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், விக்ரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபிரீஸ் டாஸ்க்:இந்த நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டது. இடையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த போட்டியாளர்களை காட்டிலும் கடந்த 83 நாட்களாக நிகழ்ச்சியில் பங்கேற்றுவரும் விசித்ரா, பூர்ணிமா உள்ளிட்டவர்கள் தங்களது சொந்தங்களை சந்திக்க முடியாமல் ஏங்கித்தான் போனார்கள். குறிப்பாக விசித்ரா மிகவும் ஏக்கத்துடன் தன்னுடைய கணவர், மகன்களின் வருகைக்காக காத்திருந்தார். ஆனால் துவக்கத்தில் அவரது குடுமபத்தினர் வரவில்லை. மாறாக பூர்ணிமா, அர்ச்சனா, ரவீனா உள்ளிட்டவர்களின் பெற்றோர், உறவினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அடுத்தடுத்த பிரமோக்கள்: இந்நிலையில் நேற்றைய தினம் விசித்ராவின் கணவர் ஷாஜி மற்றும் மகன்கள் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அவர்களின் வரவு மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் வாரயிறுதி நாளான இன்று நடிகர் கமல்ஹாசன் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹவுஸ்மேட்சின் உறவினர்கள் அதிகமான அன்பை கொட்டியதாக அவர் கமெண்ட் செய்தார். அன்புடன் அறிவுரைகளையும் அவர்கள் கொடுத்த நிலையில் போட்டியாளர்களிடம் மாற்றம் வருமா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
பூர்ணிமாவிடம் கமல் கேள்வி: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் ஹவுஸ்மேட்சிற்கு பெற்றோர், உறவினர்கள் வந்த நிலையில் அவர்கள் சொன்ன அறிவுரைகளில் எது ஏற்புடையது எது ஏற்புடையது இல்லை என அவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து பேசிய விக்ரம் யாரையும் நம்ப வேண்டாம் என்று தன்னுடைய குடும்பத்தினர் கூறியதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த கமல், யாரையும் நம்பாதே என்பதை காட்டிலும் சாயாதே என்பதுதான் சரியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய பூர்ணிமா, முதல் வாரத்திலிருந்து தான் சரியாக செய்திருந்தால் தற்போது டாப் பிளேயராக இருந்திருப்பேன் என்று கூறினார். இதையடுத்து தற்போது அவர் டாப் பிளேயர் இல்லையா என்று கமல் கேள்வி எழுப்புவதாக பிரமோவில் காணப்படுகிறது. தொடர்ந்து மாயாவும் பேசியதை பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











