Bigg boss tamil 7: நடிப்பில் உங்களை தாண்டனும்.. விக்ரமை கூலாக ஹேண்டில் செய்த கமல்ஹாசன்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது 7வது சீசனும் நடந்துவரும் நிலையில், இன்னும் 3 வாரங்களில் இந்த சீசனும் நிறைவடையவுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, இன்றைய தினம் 84வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வாரயிறுதி நாளான நேற்றும் இன்றும் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். கடந்த சில நாட்களாக நிகழ்ச்சியில் ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்ற நிலையில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதையொட்டி நேற்றைய தினம் கமல்ஹாசன் பேசியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து தங்களது குடும்பத்தினரிடம் இருந்து அவர்கள் எந்தெந்த விஷயங்களை சிறப்பான வகையில் பெற்றுக் கொண்டனர் என்றும் கமல்ஹாசன் கேட்டார். இன்றைய தினத்திற்கான பிரமோக்கள் வெளியான நிலையில், அதிலும் ஹவுஸ்மேட்சிடம் பல விஷயங்களை கமல்ஹாசன் பேசினார்.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்பொழுதுதான் துவங்கப்பட்டது போல இருக்கிறது, அதற்குள்ளாகவே 84வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சியில் துவக்க போட்டியாளர்களாக பங்கேற்ற 18 பேரை மிகச்சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தார் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து போட்டியாளர்கள் எலிமினேட் ஆன நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரியாக 7 பேர் நிகழ்ச்சியில் நுழைந்த நிலையில், தற்போது நிகழ்ச்சி தினேஷ், அர்ச்சனா போன்றவர்களால் களைகட்டியுள்ளது.
வாரயிறுதி எபிசோட்கள்: இந்த நிகழ்ச்சியின் வாரயிறுதி எபிசோட்களில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று நிகழ்ச்சியில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பஞ்சாயத்து செய்தும், கோபப்படும் இடங்களில் கோபப்பட்டும், ரெட் கார்ட் கொடுத்தும் பல விஷயங்களை செய்து நிகழ்ச்சிக்கு வண்ணங்களை சேர்த்து வருகிறார். நிகழ்ச்சி இன்றைய தினம் 84வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இன்னும் 3 வாரங்களுக்கும் குறைவான நாட்களே இந்த நிகழ்ச்சி நடக்கும் என்பதால் தற்போது அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை நிகழ்ச்சியில் ஏற்பாட்டாளர்கள் இணைத்து வருகின்றனர்.
அடுத்தடுத்த பிரமோக்கள்: அந்த வகையில் இன்றைய தினமும் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. வாரயிறுதி நாளான இன்றும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பல்வேறு விஷயங்கள் குறித்து ஹவுஸ்மேட்சிடம் பேசியுள்ளார். நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக ஃபிரீஸ் டாஸ்க் நடந்த நிலையில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரவீனாவின் ஆன்ட்டி மற்றும் சகோதரர் மட்டுமே நிகழ்ச்சிக்கு வந்தனர். இதனால் அவர் மிகுந்த வருத்தத்தில் காணப்பட்டார். இந்நிலையில் இன்றைய தினம் வெளியான முதல் பிரமோவில் அவரது அம்மாவுடம் நிகழ்ச்சிக்கு வந்ததை பார்க்க முடிந்தது.
போட்டியாளர்களின் இலக்குகள்: இதனிடையே தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் போட்டியாளர்களின் கோல் குறித்து கமல்ஹாசன் கேட்டறிந்தார். அதிகமான வேடங்களில் நடிக்கும் தன்னுடைய ஆசையை ரவீனா வெளிப்படுத்தினார். இதையடுத்து அவருக்கு அறிவுறுத்திய கமல்ஹாசன், இதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள கூறினார். வெறுமனே போட்டோஷுட்டுக்கு விதவிதமாக போஸ் கொடுப்பது மட்டும் போதாது என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய விசித்ரா, சினிமாவில் நடித்திருந்தாலும் இதுவரை மனதுக்கு பிடித்தமான கேரக்டர் அமையவில்லை என்று கூறினார்.
கமல்ஹாசனை தாண்ட விரும்பும் விக்ரம்: இதையடுத்து பேசிய கமல்ஹாசன், இருபது வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற ஷோவில் அவர் பங்கேற்றிருக்க முடியாது என்பதை தெளிவுப்படுத்தினார். மேலும் அவருக்கான வாய்ப்புகளை அவர்தான் உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து இந்த பிரமோவில் பேசிய விக்ரம், கமல்ஹாசனை தாண்ட வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், அவர் சொல்லவில்லை என்றால் இதை வேறு யார் சொல்வார்கள் என்று கூறினார். இவர்களது இந்த உரையாடல் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை கூட்டியது.


Click it and Unblock the Notifications











