Bigg boss tamil 7: டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. முட்டிக் கொண்ட நிக்சன் -தினேஷ்!

சென்னை: பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 86வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இன்றைய தினம் டிக்கெட் டூ பைனல் டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சிக்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியான நிலையில், டிக்கெட் டூ பைனல் டாஸ்க்கையொட்டி போட்டியாளர்கள் அடித்துக் கொண்டதை பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் தங்களது கேமை ஆடாமல், மற்றவர்களை ஜெயிக்க வைப்பதற்காக போட்டியாளர்கள் உதவி செய்ததாக நிச்கன் குற்றம் சாட்டியதை பார்க்க முடிந்தது. இதையொட்டி நிக்சன் மற்றும் தினேஷ் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையும் பார்க்க முடிந்தது.

கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கப்பட்டு, அடுத்தடுத்த டாஸ்க்குகள், பிரச்சினைகள், சவால்கள் என ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் 18 பேர் துவக்க போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்தனர். இதையடுத்து முதல் வாரத்திலேயே அனன்யா குறைவான வாக்குகள் பெற்று எலிமினேட் ஆனார். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த 7 போட்டியாளர்களில் தினேஷ், அர்ச்சனா ஆகியோர் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

Vijay TVs Bigg boss tamil 7 shows today (26th december 2023) episode promo

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: இன்னும் இரு வாரங்களில் நிறைவடையவுள்ளது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போட்டியாளர்களை பூஸ்ட் செய்யும்வகையில் அவர்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்ட்ரி கொடுத்திருந்தனர். இதனால் கடந்த வாரத்தில் நிகழ்ச்சி உணர்வுபூர்வமாக அமைந்தது. சிலருக்கு இந்த டாஸ்க் பிடிக்காமலும் போனது. ஆனாலும் இந்த டாஸ்க் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்தது. சிலரது நடவடிக்கைகள் செயற்கையாக இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பைனல் டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த டாஸ்க்குகள்: இன்னும் இரு வாரங்களில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ள நிலையில் நிகழ்ச்சியை ரசிகர்களை கவரும்வகையில் கொடுக்க அதிகமான முயற்சிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதையொட்டி தினந்தோறும் புதிய பிரச்சினைகளுக்கு போட்டியாளர்கள் தயாராகவே எழுகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு டாஸ்க்கிலும் எப்படி பிரச்சினைகளை உருவாக்குவது மற்றும் அதில் எப்படி தங்களை ஈடுபடுத்துவது என்று எழுதி வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். இவை பெரும்பாலும் ரசிகர்களை என்டர்டெயின் செய்யவே செய்கிறது.

நிக்சன் குற்றச்சாட்டு: தொடர்ந்து இந்த டாஸ்க்கில் மற்றவர்கள் ஜெயிப்பதற்காக ஹவுஸ்மேட்ஸ் காய் நகர்த்தியதாக நிக்சன் குற்றம் சாட்டினார். இதுகுறித்து வெளியான இரண்டாவது பிரமோவில், அவர் இது தனிப்பட்ட கேம் என்றும் குழுவாக விளையாடும் கேம் இல்லை என்றும் வாதிட்டார். மணி அவர் ஜெயிப்பதற்காக ஆடவில்லை என்று அவர் கூறிய நிலையில் அவர் ஜெயிப்பதற்காக தான் விளையாடியதாக ரவீனா குறிக்கிட்டு பேசினார். தொடர்ந்து நிக்சனின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த தினேஷ், தனக்கு பிடித்தமானவர்கள் ஜெயிக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் அதில் நிக்சனுக்கு என்ன பிரச்சினை என்றும் கேள்வி எழுப்பியதையும் இந்த பிரமோவில் பார்க்க முடிநதது.

மல்லுகட்டும் ஹவுஸ்மேட்ஸ்: மற்ற சீசன்களை போலல்லாமல் இந்த சீசனில் துவக்கம் முதலே போட்டியாளர்கள் சக ஹவுஸ்மேட்சுடன் மல்லுக்கட்ட தயாராக இருந்ததை பார்க்க முடிந்தது. நிக்சன், விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, ரவீனா என அடுத்தடுத்த போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் மற்றவர்களிடம் சண்டை போட எப்போதும் தயாராக இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் தினேஷ், நிக்சன் உள்ளிட்டவர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

அடுத்தடுத்த டாஸ்க்குகள்: இன்னும் இரு வாரங்களில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ள நிலையில் நிகழ்ச்சியை ரசிகர்களை கவரும்வகையில் கொடுக்க அதிகமான முயற்சிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதையொட்டி தினந்தோறும் புதிய பிரச்சினைகளுக்கு போட்டியாளர்கள் தயாராகவே எழுகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு டாஸ்க்கிலும் எப்படி பிரச்சினைகளை உருவாக்குவது மற்றும் அதில் எப்படி தங்களை ஈடுபடுத்துவது என்று எழுதி வைத்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். இவை பெரும்பாலும் ரசிகர்களை என்டர்டெயின் செய்யவே செய்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X