Bigg boss tamil 7: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி.. வெளியான பிரதீப்பின் உண்மை முகம்.. 2வது ப்ரமோ இதோ!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது 7வது சீசனில் நுழைந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் துவங்கியுள்ளது. நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே கடுமையான போட்டி காணப்பட்டது.

Vijay TVs Bigg boss tamil 7 shows today 2nd promo released

பிக்பாஸ் தமிழ் 7 ஷோவின் 2வது ப்ரமோ வெளியீடு: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டது. எந்தவிதமான தொழில்நுட்பங்களும் இல்லாமல் பல துறைகளை சார்ந்தவர்கள் ஒரே வீட்டில் 100 இருப்பதை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட். ஆனாலும் தொடர்ந்து சீசன்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர்களும் அதிகமானவர்கள் உள்ளனர்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியுள்ளது. மொத்தம் இந்த நிகழ்ச்சியில் 18 பேர் இணைந்துள்ளனர். இவர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகச்சிறப்பான வகையில் செய்திருந்தார். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த சீசனில் இணைந்துள்ளனர். எப்போதும் இல்லாதவகையில் இந்த சீசனில் பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிந்துள்ளது.

முதல் நாளிலேயே நிகழ்ச்சியின் தலைவராக இருந்த கேப்டன் விஜய், தன்னை அதிகமாக இம்ப்ரஸ் செய்யாத 6 பேரை தனி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர்கள்தான் வீட்டிலுள்ளவர்களுக்கு சமையல், க்ளீனிங் போன்ற டாஸ்க்குகளை செய்ய வேண்டும் என்றும் விதிகள் நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில் துவக்கத்திலேயே தங்களது சண்டைகள், சச்சரவுகளை போட்டியாளர்கள் துவங்கிவிட்டனர். கேப்டன் விஜய் மற்றும் பிரதீப் இடையிலும் சமையலையொட்டி வாக்குவாதங்கள் நடைபெற்றன.

இன்றைய தினம் 340 கிலோவிற்கு நிகரான எடையை போட்டியாளர்கள் ஒழுங்குப்படுத்தும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போட்டியிலிருந்து வெளியேறும் போட்டியாளர்களின் மேக்கப் பொருட்கள் அனைத்தும் திருப்பி எடுக்கப்படும் என்றும் இதற்காக வீட்டிலுள்ள எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இதையொட்டி காலை வெளியான முதல் ப்ரமோவில் போட்டியாளர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் நிற்பதாக காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில், இந்தப் போட்டியில் தோற்பது நல்லதுதான் என்று பிரதீப் கூறியதாகவும் அதனால் மேக்கப் இல்லாமல் பெண்களின் உண்மை முகம் தெரியும் என்றும் அவர் கூறியதாக பூர்ணிமா தெரிவித்துள்ளார். இதையடுத்து பெண்கள் அனைவரும் மேக்கப்பை கலைப்பதாகவும் ப்ரமோவில் காணப்படுகிறது. இதனால் பிரதீப் மீது அனைவரும் கடுப்பாக இருப்பதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X