BB 7: அக்ஷயாவிடம் சண்டையிழுத்த விஷ்ணு.. இன்னைக்கு கொஞ்சம் ஓவராத்தான் இருக்குமோ!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தன்னுடைய 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு தற்போது 7வது சீசனில் நுழைந்துள்ளது.
கடந்த 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கிய நிலையில் இன்றைய தினம் 23வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.

நான்காவது வாரத்தில் இந்த நிகழ்ச்சி தற்போது நடைபோட்டு வரும் நிலையில் இதுவரை 2 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தானே விரும்பி வெளியேறியுள்ளார்.
23வது நாளில் நுழைந்த பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் தன்னுடைய முதல் சீசனை துவங்கி 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த 1ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் சிறப்பான துவக்கவிழாவுடன் துவங்கப்பட்டு வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிகிழ்ச்சியில் இந்த ஆண்டில் சில வித்தியாசங்கள் புகுத்தப்பட்டுள்ளன. அதன்படி நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே எலிமினேஷன் காணப்பட்டது. நிகழ்ச்சியில் இரு வீடுகள் ஏற்படுத்தப்பட்டன.
7வது சீசனில் வித்தியாசம்: முதல் வாரத்திலேயே குறைவான வாக்குகள் வாங்கிய அனன்யா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி பவா செல்லதுரையும் வெளியேறினார். கடந்த வாரத்தில் விஜய் எலிமினேட் ஆன நிலையில், தற்போது 15 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. இந்த வார இறுதியில் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் சுற்று நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் 5 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் நுழைய உள்ளனர்.
நித்தம் ஒரு டாஸ்க்: இந்த நிகழ்ச்சியில் நித்தம் ஒரு டாஸ்க், விவாதங்கள், பிரச்சினைகள் என நீண்டுக் கொண்டே போகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறையாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பார்த்து வருகின்றனர். ஆயினும் சில இடங்களில் தேங்கி நிற்கும் சம்பவங்களும் இந்த நிகழ்ச்சியில் காணப்படுகிறது. கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் இருவேறு காதல் ட்ராக்குகளையும் பார்க்க முடிகிறது.
காதல் ட்ராக்குகள்: முன்னதாக ரவீனா மற்றும் மணி இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் பேசி வந்தனர். இந்நிலையில் தற்போது நிக்சன் மற்றும் ஐஷு இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே அடுத்தடுத்த டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் தொடர்ந்து அடித்துக் கொள்ளும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த வாரத்தில் ஆக்சிஜன் எமர்ஜென்சி உள்ளிட்ட டாஸ்க்குகளில் விஜய் வர்மா, அடுத்தடுத்து விஷ்ணு மற்றும் பிரதீப்புடன் மோதினார். அவர் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆக இதுவும் ஒரு காரணம்.
அடித்துக் கொண்ட விஷ்ணு: இதனிடையே இன்றைய தினம் நடைபெற்ற டாஸ்க்கில் பிரதீப் மற்றும் விஷ்ணு அடித்துக் கொண்டதை பார்க்க முடிந்தது. பேட்டரி டென் என்ற இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் குறைவான சார்ஜிங் சாக்கெட்டை கைப்பற்றி போனை சார்ஜிங் போடுவது இலக்காக கொடுக்கப்பட்டது. இதற்காக போட்டியாளர்கள் மிகுந்த மெனக்கெடலுடன் ஓடிவந்து சார்ஜிங் சாக்கெட்டை கைப்பற்ற முயன்றனர். இதில் தன்னை தள்ளி விட்டதாக விஷ்ணு அக்ஷயா மீது கோபப்பட அவரை நிக்சன் திட்டுகிறார்.
சமாதான முயற்சி: சமாதானப்படுத்தும் முயற்சியில் பிரதீப் உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களும் சண்டையிடுவதாக அமைந்துள்ளது. அக்ஷயாவும் தான் இந்த இடத்தில் இருந்தபோது அவர் அங்கே விழுந்ததாக விளக்கம் கொடுக்கிறார். விஜய்யை தொடர்ந்து நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களிடம் அதிகமாக கோபப்பட்டு அடிதடியில் ஈடுபட்டு வருகிறார் விஷ்ணு. இதையடுத்து இந்த வாரம் அவர் எலிமினேட் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











