BB tamil 7: சாப்பாட்டில் கைவைத்த யுகேந்திரன்.. விரைவில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவாரா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 தொடர்ந்து இன்றைய தினம் 19வது நாளில் களமிறங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அடுத்தடுத்த டாஸ்க்குகளை இந்தப் போட்டியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் களமிறக்கி வருகின்றனர். நேற்றைய தினம் நடத்தப்பட்ட டாஸ்கில் அடிதடி சண்டைகள் நடந்ததையும் பார்க்க முடிந்தது.
கேப்டன் யுகேந்திரனிடம் போட்டியாளர்கள் ஆவேசம்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 6 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்த நிலையில், தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி இன்றைய தினம் 19ம் நாளில் களமிறங்கியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில் முதல் வாரத்திலேயே அனன்யா எவிக்ஷன் செய்யப்பட்டார். தொடர்ந்து பவா செல்லதுரையும் வெளியேறினார்.

இதையடுத்து கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லாத நிலை காணப்பட்டது. இந்நிலையில் 16 போட்டியாளர்களுடன் நித்தம் ஒரு டாஸ்க்குடன் போட்டி களைகட்டி வருகிறது. நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆக்சிஜன் டாஸ்க்கில் ஆக்சிஷன் சிலிண்டர்களை கைப்பற்றும் முயற்சியில் போட்டியாளர்களிடையே அடிதடி சண்டை நடைபெற்றதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து அந்த டாஸ்க் இடையிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை வெளியிடப்பட்ட முதல் ப்ரமோவில் அடுத்த டாஸ்க்கை போட்டியாளர்கள் மேற்கொண்டனர். ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க் என்று பெயரிடப்பட்டிந்து இந்த டாஸ்கில் தோற்ற பிக்பாஸ் வீட்டார், வீட்டில் சமைக்கப்படும் எந்த உணவையும் சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டது. இதனால் ஒருசிலருக்கு சாப்பாடு கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து மாயா, சரவணன் உள்ளிட்டவர்கள் கேப்டன் யுகேந்திரனிடம் சண்டையிட்டதையும் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில் பார்க்க முடிந்தது.
இந்த விஷயத்தில் ஜோவிகாதான், ஐடியா கொடுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து சாப்பாட்டில் கைவைத்தால் யுகேந்திரன் விரைவில் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்படுவார் என்றும் அவர்கள் ஆக்ரோஷமாக தெரிவித்தனர். இதனால் அந்த இடமே மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. சாப்பாடு கொடுக்கப்படாத விஷயத்தில் அவர்கள் எந்த மாதிரியான முடிவை எடுப்பார்கள் என்பது குறித்து அறிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
அடுத்தடுத்த போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டு, இறுதிப் போட்டியாளரை, டைட்டில் வின்னரை ரசிகர்களின் வாக்கெடுப்போடு 100 நாளில் தேர்வு செய்யப்பட உள்ளார். முன்னதாக இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் சுற்றில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இருவர் நுழையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பெண் போட்டியாளராக அர்ச்சனா நுழையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல ஆண் போட்டியாளராக பிரபல கானா பாடகர் பாலா நுழையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் கலைஞர் டிவியின் கானா குயில் பாட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டில் வென்றவர். வழக்கறிஞராகவும் செயல்பட்டுவரும் இவர், அதிகமான திரைப்பட பாடல்களையும் பாடி வருகிறார். பல இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இவர் செயல்பட்டு வரும் நிலையில், பிக்பாஸ் மூலம் மேலும் இவர் பிரபலமாவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











