BB 7: ஸ்ட்ரைக்கில் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா.. போட்டியாளர்களை பார்த்து கேட்ட கமல்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் ஆங்கராக தொடர்ந்து இருந்துவரும் நிகழ்ச்சி விஜய் டிவியின் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 6 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்த நிலையில், கடந்த 1ம் தேதி முதல் 7வது சீசனை துவங்கியுள்ளது.
இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

13வது நாளை எட்டிய பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. கடந்த 1ம் தேதி இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் மிகப்பெரிய பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இந்த சீசனிலும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் துவங்கியுள்ள இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 13ம் நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களிடையே மிகப்பெரிய போட்டி, பொறாமை, வாக்குவாதங்கள், சண்டைகள் போன்ற பலவற்றை இந்த 13 நாட்களும் பார்க்க முடிகிறது. கடந்த வாரத்தில் அனன்யா எலிமினேட் ஆன நிலையில், எழுத்தாளர் பவா செல்லதுரை, உடல்நிலையை காரணமாக சொல்லி, நிகழ்ச்சியலிருந்து வெளியேறினார். இதனால் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டாலும் அவர்களின் போட்டி, சண்டைகளில் எந்த சளைப்பும் காணப்படவில்லை.
ஒரே குடும்பமாக துவங்கிய இவர்களது பிக்பாஸ் பயணத்தில், சிலர் கேப்டனை குறைவாக இம்ப்ரஸ் செய்ததாக கூறப்பட்டு, ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து அவர்கள்தான் சமையல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகள் கொடுக்கப்பட்டன. இதனால் அவர்களுக்குள் பல பிரச்சினைகள் ஏற்பட்டதை பார்க்க முடிந்தது. இதன் வீரியம் தாங்காமல் சமைக்க மாட்டோம் என்று ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் போர்க்கொடி தூக்க பிரச்சினை வெடித்தது.
சமைத்து போட வேண்டியது உங்களது கடமை என ஜோவிகா தன்னுடைய பங்கிற்கு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினார். பதிலுக்கு நாங்கள் ஒன்றும் உங்களது அடிமைகள் இல்லை என பிரதீப் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவ்வாறு கடந்த சில தினங்களில் பிக்பாஸ் வீட்டில் பிரச்சினைகள் நிலவிய நிலையில் இன்றைய தினம் வாரயிறுதி நாளில் இன்றைய தினத்தின் இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரமோவில் பிரம்மாண்டமான என்ட்ரி கொடுத்த நடிகர் கமல்ஹாசன் உற்சாகமாக போட்டியாளர்களை எதிர்கொண்டார். புரட்சிப் போராட்டத்தில் போட்டியாளர்கள் ஈடுபட்டதை சுட்டிக் காட்டிய அவர், தண்ணீர்கூட கொடுக்காமல் இருப்பது போர் யுக்தி என்று குறிப்பிட்டார். மேலும் ஸ்ட்ரைக் செய்தது நியாயமா, நியாயம் இல்லையா என்பதல்ல கேள்வி, ஆனால் நியாயத்திற்காக செய்யப்படும் ஸ்ட்ரைக்கில் நியாயம் இருக்க வேண்டாமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஸ்ட்ரைக் குறித்த முன் அறிவிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், அநியாயம் செய்த போட்டியாளர்களுக்கு நியாயம் எப்படி கிடைக்கும் என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்புவதாக தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில் காணப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் இந்த விவகாரத்தில் கமல் எந்த மாதிரியான முடிவை வெளிப்படுத்துவார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











