Bigg boss tamil 7: விசித்ராவிடம் மன்னிப்பு கேட்ட பூர்ணிமா அம்மா.. சொந்தங்களை சந்தித்த ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் என்ட்ரி கொடுத்து அதிரடியாக பல எபிசோட்களை கொடுத்து வருகிறது.

18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 12 போட்டியாளர்களுடன் நடைபோட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன் உள்ளிட்டவை நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சியில் முக்கியமான ட்விஸ்ட் நடந்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 6 சீசன்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 7வது சீசனிலும் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். அவரது சிறப்பான தொகுப்பில் நிகழ்ச்சி தொடர்ந்து களைகட்டி வருகிறது. இருந்தபோதிலும் அவரது தொகுப்பு கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

Vijay TVs Bigg boss tamil 7 today (19th december 2023) episode promos released

பிரீஸ் டாஸ்க்: இதனால் அடுத்த சீசனில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 79வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதையடுத்து நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தினம் ஹவுஸ்மேட்ஸ் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பிரீஸ் டாஸ்க் நடைபெற்றது. இதில் ஹவுஸ்மேட்சின் பெற்றோர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

அடுத்தடுத்த பிரமோக்கள்: இதையொட்டிய பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் நீண்ட நாட்கள் கழித்து தங்களது அப்பா, அம்மா உள்ளிட்டவர்களை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் அவர்களை கட்டித்தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்திய தருணங்களை பார்க்க முடிந்தது. இன்றைய தினத்திற்கான முதல் பிரமோவில் பூர்ணிமா, அர்ச்சனா, விக்ரம், விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் தங்களது பெற்றோரை வரவேற்று அன்பை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது.

விசித்ராவிடம் மன்னிப்பு: தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் பூர்ணிமாவின் அம்மா, விசித்ராவிடம் சென்று தன்னுடைய மகள் அவரை ஹர்ட் செய்திருந்தால் வெரி சாரி என்று கூறுவதாக அமைந்துள்ளது. இதைப்பார்த்து பூர்ணிமா அதிர்ச்சியடைவதாகவும் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் ஹவுஸ்மேட்சுடன் இணைந்து ஆட்டம் போட்டதையும் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் ஹவுஸ்மேட்ஸ் இன்றைய எபிசோடில் தங்களது பெற்றோர்களுடன் இனிமையாக பொழுதை போக்கினர்.

உணர்ச்சிவசப்பட்ட போட்டியாளர்கள்: இந்த நிகழ்ச்சியின் துவக்க போட்டியாளர்களாக பூர்ணிமா, விக்ரம் உள்ளிட்டவர்கள் இணைந்திருந்த நிலையில் அவர்கள் தங்களது பெற்றோரை பார்த்தபோது மிகவும் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டதை பார்க்க முடிந்தது. இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் விசித்ரா, விக்ரம் மற்றும் ரவீனா உள்ள நிலையில் இவர்களில் யார் வெளியேறுவார்கள் டபுள் எவிக்ஷன் இருக்குமா என்றெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் தற்போது நடைபெற்றுவரும் பிரீஸ் டாஸ்க் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X