BB Tamil 7: நான் பேசிட்டிருக்கேன்.. விசித்ராவிற்கே டஃப் கொடுத்த ஜோவிகா.. வனிதா பொண்ணுன்னா சும்மாவா!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஞாயிற்றுகிழமை பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியது.

அன்றைய தினம் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 18 பேரையும் சிறப்பான முன்னுரையுடன் அறிமுகப்படுத்தி வைத்தார் நிகழ்ச்சியின் ஆங்கர் கமல்ஹாசன்.

Vijay TVs Bigg boss tamil season 7 show todays 2nd promo released

இதனிடையே இன்றைய தினம் 5வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி. இந்த 5 நாட்களில் அடுத்தடுத்த சர்ச்சைகளையும் போட்டிகளையும் சவால்களையும் பார்க்க முடிகிறது.

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியின் இன்றைய 2வது ப்ரமோ ரிலீஸ்: விஜய் டிவியின் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ். கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்து தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பான முன்னுரையை கொடுத்து அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் கமல்ஹாசன்.

நிகழ்ச்சியின் நீட்டிக்கப்பட்ட வடிவங்களாக பிக்பாஸ் அல்ட்டிமேட், பிக்பாஸ் ஜோடிகள் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை சேனலில் அறிமுகம் செய்து, அவற்றையும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளாக மாற்றியுள்ளது விஜய் டிவி. இதில் பிக்பாஸ் அல்ட்டிமேட் ஷோவை தொகுத்து வழங்கினார் நடிகர் சிம்பு. இந்த நிகழ்ச்சியின் இடையிலேயே நடிகர் கமல்ஹாசன் வெளியேறியதால் அவருக்கு பதிலாக சிம்பு களமிறங்கினார்.

இந்நிலையில் தற்போது துவங்கியுள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 5வது நாளை எட்டியுள்ளது. வழக்கமான பாணியில் இல்லாமல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 பிக்பாஸ் வீடுகள் காணப்படும் நிலையில், முதல் நாளிலேயே 6 போட்டியாளர்கள் இரண்டாவது வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். இவர்கள் அனைவரும் தலைவர் கேப்டன் விஜய்யை அதிகமாக கவராத போட்டியாளர்களாக காணப்பட்டதால் இரண்டாவது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் இந்த 5 நாட்களும் அடுத்தடுத்த சர்ச்சைகளையும், போட்டிகளையும் சவால்களையும் போட்டியாளர்கள் சந்தித்து வருகின்றனர். விசித்ராவின் உடை குறித்த கமெண்ட் பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. அவர் தொடர்ந்து சக போட்டியாளர்களை குறிப்பாக பவா செல்லதுரையை கலாய்த்து கமெண்ட் செய்து வருவதும் ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் குறித்த கணிப்புகளும் உலவி வருகின்றன.

இதனிடையே 5வது நாளான இன்றைய தினம் வெளியாகியுள்ள 2வது ப்ரமோவில், வனிதாவின் மகள் ஜோவிகா மற்றும் விசித்ரா இடையில் மிகப்பெரிய வாக்குவாதம் நடப்பதை பார்க்க முடிகிறது. முன்னதாக ஜோவிகா தன்னுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்தியது குறித்து விசித்ரா, அறிவுரை வழங்கியிருந்தார். இந்நிலையில் ஜோவிகாவின் படிப்பு விஷயத்தில் தான் குறுக்கிடவில்லை என்றும் அடிப்படை கல்வி அவசியம் என்பதையே தான் சுட்டிக் காட்டியதாகவும் இன்றைய விவாதத்தில் விசித்ரா பேசுகிறார்.

இதற்கு பதிலளித்த ஜோவிகா, எல்லாரும் படித்துதான் பெரிய ஆளாக மாறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறுகிறார். இந்த விவாதத்தில் குறுக்கிட்ட விசித்ரா, ஜோவிகா தான் கூற வருவதை தவறாக புரிந்துக் கொண்டுள்ளதாக கூறுகிறார். இதையடுத்து அவரை மறித்து பேசிய ஜோவிகா, விசித்ரா பேசும்வரை தான் காத்திருந்ததாகவும் அதனால் தன்னுடைய பேச்சின் இடையில் அவர் பேசக்கூடாது என்றும் கறாராக கூறுகிறார்.

விவாதத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது அர்த்தமில்லை என்று விசித்ரா கூறிய நிலையில், தான் ஏதாவது தவறாக பேசினேனா என்று எதிர் கேள்வி கேட்கிறார் ஜோவிகா. தொடர்ந்து விசித்ரா, இடைமறித்து பேசியதை தொடர்ந்து நான் பேசிக்கிட்டிருக்கிறேன் என்று மிரட்டலாக தன்னுடைய பேச்சை தொடர்கிறார் ஜோவிகா. பிக்பாஸ் என்றாலே வனிதா விஜயகுமார்தான் நினைவிற்கு வருவார். அந்த அளவிற்கு அதிரடியாக பேசி, நடந்து கொண்டவர் அவர். அவருடைய மகளான ஜோவிகாவிற்கும் இயல்பிலேயே அந்த குணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X