Venkatesh Bhatt: குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியிலிருந்து விலகும் நடுவர்.. என்னங்க சொல்றீங்க?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியின் வரிசையில் முக்கிய இடம் பிடித்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. 3 சீசன்களை இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்து தற்போது 4வது சீசனையும் நிறைவு செய்ய உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் குக்குகள், கோமாளிகள், ஆங்கர் தர்ஷன் மட்டுமில்லாமல் நடுவர்களும் சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றனர்.

அவ்வப்போது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு கெஸ்ட்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் களைகட்ட செய்து வருகின்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகும் நடுவர்?: விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் பிக்பாஸிற்கு அடுத்தபடியாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளிதான். இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்து, தற்போது 4வது சீசனின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. கடந்த ஜனவரியில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, விரைவில் பைனல் போட்டியை நடத்தவுள்ளது. இதற்கான 5 பைனல் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரசிகர்களின் விருப்பத்திற்குரிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமையலையும் காமெடியையும் ஒருங்கிணைத்து ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குக்குகள், கோமாளிகள் மட்டுமில்லாமல் ஆங்கர் தர்ஷன் மற்றும் நடுவர்களும் சுவாரஸ்யத்தை கூட்டி வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக நிகழ்ச்சி பல்வேறு டாஸ்க்குகளுடன் களைகட்டிய நிலையில், தற்போது ஷிவாங்கி, ஸ்ருஷ்டி உள்ளிட்ட போட்டியாளர்கள் இறுதிப்போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குக் வித் கோமாளி கடந்த 3 சீசன்களை சிறப்பாக முடித்துள்ள நிலையில் கடந்த ஜனவரியில் 4வது சீசனை துவங்கியது. கடந்த சில மாதங்களாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் இந்த நிகழ்ச்சி, இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ளது. இறுதிப் போட்டியாளர்களும் தேர்வாகியுள்ள நிலையில், தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள நடுவர் வெங்கடேஷ் பட், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பாலா, புகழ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து இவர் செய்துவந்த லூட்டியை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்துவிட முடியாது. இவரிடம் பாலா மற்றும் புகழ் இருவரும் கொம்பால் அடிவாங்கிய சம்பவங்களும் உண்டு. மற்ற போட்டியாளர்களையும் இவர் விட்டு வைக்கவில்லை.
இந்நிலையில் இவர் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்களை வெங்கடேஷ் பட் தொடர்ந்து வெளியிட்டு வரும் சூழலில், அவர் வெளிநாட்டிலேயே தங்கிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் விரைவில் நிகழ்ச்சி நிறைவுறவுள்ள நிலையில், இந்த முடிவை அவர் எடுக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. ஒருவேளை இந்த சீசனுடன் அவர் விலகுகிறாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











