ஈரமான ரோஜாவே 2: ஜீவா முகத்தில் பூவை விட்டெறியும் ப்ரியா.. ஆத்திரத்தில் பார்வதி!! அடுத்தது என்ன ?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே 2. அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
இந்தத் தொடரில் ஜீவாவும் காவ்யாவும் காதலித்துவரும் சூழலில் சந்தர்ப்ப வசத்தால், ஜீவா, காவ்யாவின் அக்கா பிரியாவையும் காவ்யா, ஜீவாவின் அண்ணன் பார்த்தியையும் திருமணம் செய்துக் கொள்கின்றனர்.
பெற்றோரின் வேண்டுகோளுக்காக தங்களது காதலை இவர்கள் தியாகம் செய்ய, அதை புரிந்துக் கொள்ளாமல் பார்த்தியும் ப்ரியாவும் அவர்களிடம் தொடர்ந்து கோபம் கொண்டு வாழாமல் உள்ளனர்.

ஈரமான ரோஜாவே 2 தொடரின் ஒரே மாதிரியான காட்சிகள்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே 2. இந்தத் தொடரின் முதல் சீசனும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தொடரின் இரண்டாவது சீசன் கலர்புல் காம்பினேஷனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது. தொடரில் காவ்யா மற்றும் ஜீவா இருவரும் காதலிக்க, சந்தர்ப்ப சூழல்களால் அவர்கள் ஜோடி மாறி திருமணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது.
காவ்யா ஜீவாவின் அண்ணன் பார்த்தியையும் ஜீவா காவ்யாவின் அக்கா பிரியாவையும் திருமணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று தங்களது காதலை தியாகம் செய்யும் ஜீவா மற்றும் காவ்யா, இந்த திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர். ஆனாலும் திருமணத்திற்கு பிறகு தங்களது துணைகளை ஏற்க முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர். இதனால் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
இந்தத் தொடரில் பார்த்திபனை அவரது நல்ல குணங்களை புரிந்துக் கொள்ளும் காவ்யா, அவரை விரும்பத் துவங்குகிறார். தொடர்ந்து அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசத் துவங்கிய நிலையில், அவர்களை பிரிக்க பார்த்தியின் அத்தை செய்யும் சதி வேலைகளை செய்கிறார் . தன்னுடைய மனைவியை சபையில் விட்டுக் கொடுக்காமல் செயல்பட்டாலும், தனியாக இருக்கும்போது, காவ்யா தன்மீது நம்பிக்கை இல்லாமல் தன்னுடைய முந்தைய காதலை மறைத்ததாக குற்றம் சாட்டுகிறார் பார்த்தி.
இதனால் அவர்கள் இருவரும் வெளியுலகிற்கு மட்டுமே கணவன் -மனைவியாக வாழ்கிறார்கள். இதனிடையே தன்னுடைய கர்ப்பம் குறித்து தெரியவரும் காவ்யா, தன்னுடன் இணக்கமாக இல்லாத பார்த்தியிடம் அதை கூறாமல் மறைக்கிறார். தொடர்ந்து தனது அத்தை மூலம் இந்த விஷயத்தை கேள்விப்படும் பார்த்தியின் கோபம் மேலும் அதிகரிக்கிறது. காவ்யா செய்த துரோகங்களை தன்னுடைய வாழ்நாளில் தான் மறக்க மாட்டேன் என்று கூறுகிறார்.

இந்நிலையில் தன்னுடைய முந்தைய காதலால் தன்னுடன் கோபமாக இருக்கும் தன்னுடைய மனைவி பிரியாவை தன்னுடைய வழிக்கு கொண்டு வர தொடர்ந்து பிரம்மபிரயத்தனம் செய்கிறார் ஜீவா. சீரியல் நீட்டிப்பிற்காகவோ என்னவோ, அவரது முயற்சிகள் எதுவும் பலிக்காமல் போகிறது. இந்நிலையில் காவ்யா கர்ப்பத்திற்காக கோயிலில் அன்னதானம் செய்ய குடும்பத்தினருடன் செல்கின்றனர். அங்கு சாமி பாதத்தில் வைத்து பூவை, பிரியாவிடம் கொடுக்கும்படி ஜீவாவின் அம்மா பார்வதி கூறுகிறார்.
அவரும் பிரியாவிடம் சென்று தன்னுடைய அம்மா கொடுத்த பூவை கொடுக்கிறார். ஆனால் கோயிலில் மற்றவர்கள் இருப்பதையும் சட்டை செய்யாமல் பிரியா, பூவை அவர்மீது வீட்டெறிகிறார். இந்த இடத்தில் யாராக இருந்தாலும் கோபம் வரும். ஆனால் ஜீவா, என்னங்க சாமி பூவை இப்படி விட்டெறியறீங்க என்ற கேள்வியுடன் நிறுத்திக் கொள்கிறார். நமக்குத்தான் கோபம் வருகிறது. இதை பார்க்கும் ஜீவாவின் அம்மா பார்வதிக்கும் கோபம் வருகிறது. நியாயம்தானே?


Click it and Unblock the Notifications











