Eeramana Rojavae 2: வெளிப்பட்ட காவ்யா குறித்த உண்மை.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

சென்னை: விஜய் டிவி தொடர்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. சிறப்பான தொடர்கள் இந்த சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வகையில், கடந்த வாரத்திற்கான Urban categoryயில் முதலிடத்தை விஜய் டிவி பெற்றுள்ளது. இதில் சன் டிவியே தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இந்த சேனலின் ஈரமான ரோஜாவே 2 தொடர், அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Vijay TVs Eeramana Rojavae 2 Serial new promo makes everyone more expecting

ரசிகர்களிடம் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஈரமான ரோஜாவே 2 ப்ரமோ: நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை தொடர்களுக்கும் சேனல்கள் வழங்கி வருகின்றன. சமயத்தில் நிகழ்ச்சிகளை சேனல்களின் தொடர்கள் ஓவர்டேக் செய்யும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்கள் தங்களது சேனல்களில் தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளன.

கடந்த வாரத்திற்கான Urban categoryயில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்கள் முதலிடத்தை பெற்று சேனலுக்கு பெருமை சேர்த்துள்ளன. இதில் எப்போதும் சன் டிவியின் தொடர்களே முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது தன்னுடைய இடத்தை சன் டிவி இழந்துள்ளது. ஆனாலும் மொத்த புள்ளிகளில் சன் டிவியே முதலிடத்தில் உள்ளது. விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக ஈரமான ரோஜாவே 2 தற்போது மாறியுள்ளது.

Vijay TVs Eeramana Rojavae 2 Serial new promo makes everyone more expecting

இந்தத் தொடரில் ஜோடி மாற்றி திருமணம் நடந்த நிலையில், அதையொட்டிய சந்தேகங்கள், பிரச்சினைகள் மையமாக கொள்ளப்பட்டுள்ளது. பார்த்திக்கும் பிரியாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திருமணத்தின்போது பிரியா கடத்தப்படுகிறார். இதனால் ஏற்பட்ட குழப்பங்களை சரிசெய்ய குடும்பத்தினர், பார்த்திக்கும் பிரியாவின் தங்கை காவ்யாவிற்கும் திருமணம் செய்கின்றனர். இதையடுத்து கடத்தப்பட்டவர்களிடம் இருந்து பிரியாவை மீட்டுவரும் பார்த்தியின் தம்பி ஜீவாவிற்கும் பிரியாவிற்கும் திருமணம் நடக்கிறது.

தங்களின் காதலை மறக்க முடியாத ஜீவா மற்றும் காவ்யா, தங்களது திருமண வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளை மையமாக கொண்டு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரும் தங்களது துணையை ஏற்க முடிவெடுத்த நிலையில், அவர்கள் தங்கள்மீது நம்பிக்கையில்லாமல் தங்களது காதலை மறைத்ததாகக் கூறி, பார்த்தி மற்றும் பிரியா அவர்களை ஏற்கமுடியாமல் உள்ளனர்.

Vijay TVs Eeramana Rojavae 2 Serial new promo makes everyone more expecting

இந்நிலையில், காவ்யா தான் கர்ப்பமான விஷயத்தை பார்த்தியிடம் சொல்ல முடியாமல் மறைக்கிறார். அவரது அன்பை பெற்றவுடன் தான் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம் என்று காவ்யா நினைக்கும் சூழலில், இந்த உண்மை பார்த்திக்கு தெரியவருகிறது. இதனால் அவர் காவ்யா மீது கோபப்படுகிறார். தன்னிடம் அவர் இந்த உண்மையையும் மறைத்துவிட்டதாக பாய்கிறார். இந்நிலையில், இந்த உண்மை பார்த்தியின் பெற்றோருக்கு தெரியவருகிறது.

தங்களது குடும்பத்தின் வாரிசை, அதிலும் இரட்டை குழந்தைகளை காவ்யா, சுமந்துவரும் உண்மையை தெரிந்து அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். இதனால் தங்களின் மனஸ்தாபம் அவர்களுக்கு தெரியவேண்டாம் என்று காவ்யாவிடம் பார்த்தி கூறுகிறார். தொடர்ந்து, தன்மீதான பார்த்தியின் அபிப்ராயம் மாறும் என்றும் அதற்காக தான் காத்திருப்பேன் என்றும் காவ்யா கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X