Neeya Naana: அப்பா கடனை தீர்த்த கணவர்.. நீயா நானா நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய மனைவி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி மற்றும் ஒரே விவாத நிகழ்ச்சியாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது நீயா நானா ஷோ.

இந்த நிகழ்ச்சியின் சிறப்புக்கு முழுமுதல் காரணமாக நிகழ்ச்சியின் ஆங்கர் கோபிநாத் காணப்படுகிறார். பல ஆண்டுகளாக இவர் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் சுவாரஸ்யமான விவாதங்களை இந்த நிகழ்ச்சி கொடுத்து வருகிறது. இந்த வாரமும் வித்தியாசத்திற்கு குறைவில்லாமல் தலைப்பு காணப்பட்டது.

நீயா நானா புதிய எபிசோடால் ரசிகர்கள் உற்சாகம்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாகவும் ஒரே விவாத நிகழ்ச்சியாகவும் தொடர்ந்து 10 ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்துவரும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு மேலும் முக்கியமான காரணம் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ஒரே ஆங்கராக கோபிநாத் காணப்படுவதுதான். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த நிகழ்ச்சியில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. ஒரு விஷயத்தில் இருதரப்பு நியாயம் என்பது இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தி வருகிறது.

இந்த வாரமும் வித்தியாசமான தலைப்புடன்தான் கோபிநாத் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். கணவரின் பணம் என் பணம் மற்றும் பெண்களுக்கென்று தனிப்பட்ட பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்ற தலைப்பில் இன்றைய நிகழ்ச்சி களைகட்டியது. இதில் பேசிய இருதரப்பினரும் சிறப்பான கருத்துக்களை முன் வைத்து நிகழ்ச்சியை சிறப்பாக்கினர். கோபிநாத்தும் அவர்களை பல்வேறு வகைகளில் கேள்வி கேட்டு மடக்கினார்.

கணவரின் பணம் தங்களின் பணம் என்று எந்த தருணத்தில் உணர்ந்தீர்கள் என்று கோபிநாத் கேள்வி எழுப்ப, குழந்தை பிறப்பு உள்ளிட்ட தருணங்களில் வேலைக்கு போகாத சமயத்திலும், வீட்டில் அதேபோன்ற லைஃப் ஸ்டைலை தாங்கள் மேற்கொள்ள வழிவகை ஏற்பட்டபோது கணவரின் பணம் தங்களது பணம்தான் என்று உணர நேர்ந்ததாக ஒருவர் பெருமையுடன் குறிப்பிட்டார். இதேபோல சம்பளம் கிடைத்தவுடன், லோன் போன்றவற்றை செலுத்திவிட்டு மீதமுள்ள பணத்தை தன்னுடைய அக்கவுண்டிற்கு தன்னுடைய கணவர் மாற்றி விடுவார் என்றும், அவருடைய தேவைக்குக்கூட தன்னிடம்தான் வாங்கிக் கொள்வார் என்றும் மற்றொருவர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்நிலையில், தான் வீட்டிற்கு ஒரே பெண் என்றும் தன்னுடைய அப்பா இறந்தபோது, அவர் விட்டு சென்ற கடனை, தன்னுடைய கணவர்தான் அடைத்தார் என்றும், இதுவரை இதுகுறித்து ஒருவார்த்தைகூட கேள்வி கேட்கவில்லை என்றும் மற்றொரு பெண் மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டினார். இத்தகைய தருணங்கள் கணவரின் பணம் தங்களின் பணம் என்று உணர வைத்ததாக இவர்கள் குறிப்பிட்டனர்.

Vijay TVs Neeya Naana show new episode makes fans more thrilling 23-07-2023

ஆனால் கணவர் இவ்வாறு கொடுக்கும் பணத்திற்கு கணக்கு கேட்பதாகவும் அதனால் அந்தப் பணத்தை தன்னுடைய பணம் என்று உணர முடியாமல் போவதாகவும் எதிர்தரப்பினர் குற்றம் சாட்டினர். ஆனால் ஒவ்வொரு செலவிற்கும் கணக்கு மேற்கொள்வது சிறப்பானது என்றும் இதன்மூலம் அந்த பணத்தை நிர்வகிப்பதில் ஒரு நிதானம் ஏற்படும் என்றும் அதனால் கணக்கு கேட்டால் அதை கொடுப்பது சாத்தியம்தான் என்றும் எதிர்தரப்பினர் கூறினர். இந்தக் கருத்தை கோபிநாத்தும் ஆமோதித்து பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X