Neeya Naana show: நீயா நானா இதுவரை சந்திக்காத பிரச்சினை.. வெளிப்படுத்திய கோபிநாத்!
சென்னை: விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்ததாக சேனலின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தனது 7வது சீசனை ஒளிபரப்ப உள்ளது. கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிலையில் சேனலின் முன்னணி விவாத நிகழ்ச்சியான நீயா நானா ஷோ தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறது.
விஜய் டிவியின் நீயா நானா ஷோவின் புதிய ப்ரமோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளான குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்டவை பல சீசன்களை கடந்து மாஸ் காட்டி வருகின்றன. அந்த வகையில் சேனலின் முன்னணி விவாத நிகழ்ச்சியான நீயா நானா ஷோ, பல ஆண்டுகளை கடந்து ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது. தொடர்ந்து ஒரே ஆங்கரை கொண்டு, இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகி வருவது இதன் முக்கியமான சிறப்பாக பார்க்கப்படுகிறது.

நாட்டின் முக்கியமான நடப்பு மற்றும் பிரச்சினைகளை மையமாக கொண்டு, இருவேறு கருத்துக்களை கொண்டவர்களை கொண்டு இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான டாப்பிக்குடன்தான் நிகழ்ச்சி களமிறங்கியுள்ளது. காதல் செய்ய சொல்லும் பெற்றோர்கள், சிறப்பான காதல் அமையாத பிள்ளைகள் என்பதை இந்த வாரத்தின் விவாதமாக இந்த நிகழ்ச்சி கொண்டுள்ளது. இரு தரப்பினரும் சிறப்பான விவாதங்களை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் இருவேறு தரப்பினரும் பேசினர். நிகழ்ச்சியில் பேசிய இளம்பெண் ஒருவரின் அம்மா, கல்லூரி படிப்பை முடித்து தற்போது பணியாற்றிவரும் தன்னுடைய பெண்ணிற்கு இதுவரை காதல் அமையவில்லை என்றும் யாரும் லவ் லெட்டர் கொடுத்ததில்லை என்றும் பேசியிருந்தார். தானே, அவரிடம் நேரடியாக யாரையாவது லவ் செய்கிறாயா என்று கேட்டதாகவும் ஆனால் அவரது பதில் இல்லை என்பதாகவே அமைவதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கோபிநாத், அந்தப் பெண்ணிடம் கேள்வி எழுப்பிய நிலையில், இதுவரை தனக்கு காதல் எதுவும் செட்டாகவில்லை என்று அவர் கூறியுள்ளார். தான் லேடீஸ் ஸ்கூலில் படித்ததாகவும், இரண்டு வருடங்கள்தான் கோயெட்டில் படித்ததாகவும் அவர் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து கோவிட் காலகட்டத்தில் தான் வீட்டில் முடங்கியதாகவும் இதனிடையே தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் காதலுக்கான சந்தர்ப்பம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் அந்த இளம்பெண் கூறுயுள்ளார்.
இதகுறித்து தொடர்ந்து பேசிய அவரது அம்மா, தன்னுடைய மகள், யாரையும் லவ்வுடன் பார்ப்பதில்லை என்றும் அடிப்பது போலவே பார்க்கிறார் என்றும் கேலி பேசினார். மேலும் தானே கூறினாலும் வீட்டை விட்டு அவர் வெளியில் போவதில்லை என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அந்த இளம்பெண், பெண்கள் பள்ளியில் படித்ததாலும் தொடர்ந்து கோவிட் காலகட்டத்தில் வீட்டில் இருந்ததாலும் தனக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டதாகவும் இதுவே தனக்கு காதல் கிடைக்காததற்கு காரணம் என்று கூறினார்.

இந்நிலையில் கோவிட், கோயெட் எல்லாவற்றையும் கடந்துள்ள அந்தப் பெண், தற்போது காதலிப்பதில் என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பிய நிகழ்ச்சியின் ஆங்கர் கோபிநாத், நீயா நானா நிகழ்ச்சி இதுவரை பல பிரச்சினைகளை சந்தித்துள்ளதாகவும் இதுபோன்ற ஒரு பிரச்சினையை சந்தித்ததில்லை என்றும் நகைச்சுவையுடன் கூறியுள்ளார். நாளை மதியம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











