Neeya Naana show: மற்றவர் உணவு சுதந்திரத்தில் தலையிட முடியாது.. உண்மையை உரக்க சொன்ன கோபிநாத்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி விவாத நிகழ்ச்சியான நீயா நானா ஒவ்வொரு வாரமும் வித்தயாசமான தலைப்புகளில் விவாதங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி 10 ஆண்டுகளை கடந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக கோபிநாத் காணப்படுகிறது.

நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே ஆங்கராக கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக காணப்படுகிறார். இந்த நிகழ்ச்சியின்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளையும் கோபிநாத் பெற்றுள்ளார்.
நீயா நானா ஷோ: விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான டிஆர்பிக்களையும் பெற்று வருகின்றன. இந்த சேனலில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்துவரும் நிலையில், சில நிகழ்ச்சிகளே அடுத்தடுத்த சீசன்களில் நடைபோட்டு வருகின்றன. ஆனால் தொடர்ந்து 10 ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வரும் விவாத நிகழ்ச்சியாக நீயா நானா காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கம் முதலே ஆங்கர் கோபிநாத் சிறப்பான தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
ஆங்கர் கோபிநாத்: விவாத நிகழ்ச்சி என்றால் அதற்கு பொருத்தமானவர் என்ற பெயரை இந்த நிகழ்ச்சி மூலம் பெற்றுள்ளார் கோபிநாத். இந்த நிகழ்ச்சிமூலம் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுள்ளார். திரைப்படங்களிலும் தொகுப்பாளர் உள்ளிட்ட கேரக்டர்களையே அதிகமாக நடித்து வருகிறார். ஒரு விஷயத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டால் அதில் இருதரப்பு நியாயங்களும் அலசப்பட வேண்டும என்பதே நீயா நானா நிகழ்ச்சியின் சிறப்பாக காணப்படுகிறது.
வித்தியாசமான தலைப்புகள்: ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறது நீயா நானா. இதில் அழுத்தமான டாபிக்குகள் மட்டுமில்லாமல் மிகவும் எளிமையான டாப்பிக்குகளும் ரசிகர்களை கவரும்வகையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த இருதரப்பு வாதங்களை சரியான தளத்தில் இருவரின் கருத்துக்களையும் ஆமோதித்தும் எதிர்த்து நிகழ்ச்சியை சிறப்பாக்கி வருகிறார் கோபிநாத். அந்த வகையில் முன்னணி இடத்தில் நீயா நானா ஷோ காணப்படுகிறது.
சிறப்பான தலைப்பில் விவாதம்: இந்த வாரமும் சிறப்பான தலைப்புடனேயே ரசிகர்களை அணுகியுள்ளது நீயா நானா நிகழ்ச்சி. இந்த வாரம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் என இருதரப்பினரின் பிரச்சினைகள், தீர்வுகள் என விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ப்ரமோவும் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த சங்கங்களின்மீது இருக்கும் புகார்கள் என்ன என கேள்விக் கேட்டார் கோபி.
குடியிருப்பில் பிரச்சினை: உடனடியாக தன்னுடைய ஆதங்கத்தை ஒரு பெண் கொட்டினார். பூ விற்பவர்கள், இடியாப்பம் விற்பவர்கள் என குடியிருப்புக்குள் அனுமதிக்கிறார்கள் எனவும் ஆனால் மீன் விற்பவர்களை அனுமதிப்பதில்லை என்றும் அவர் கூறினார். அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிகமான வெஜிட்டேரியன் ஆட்கள் இருப்பதால் வாட்ச்மேன் அவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை என தன்னுடைய குற்றத்தை அவர் பதிவு செய்தார்.
உணவு சுதந்திரம் குறித்து கோபிநாத்: இந்த விவகாரத்தில் தங்களுடைய பவரை செலுத்தி அவர்களுக்கு பிடிக்காததை அனுமதிப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து எதிர்தரப்பினரிடம் கோபிநாத் கேள்வி கேட்க, அவர்கள், வெங்காயம், பூ போன்றவற்றில் கெட்ட நாற்றம் வருவதில்லை எனவும் குடியிருப்பில் உள்ள மெஜாரிட்டியானவர்கள் இதை அனுமதிக்க வேண்டாம் என்று கூறுவதாகவும் அவர் பதில் கொடுப்பதாக தற்போதைய ப்ரமோவில் காணப்படுகிறது. இதையடுத்து பேசிய கோபிநாத் மெஜாரிட்டி மக்கள் கூறினாலும் மற்றவர்களின் உணவு சுதந்திரத்தில் தலையிட முடியாது என்று கூறுவதாகவும் இந்தப் ப்ரமோவில் உள்ளது.


Click it and Unblock the Notifications











