Pandian stores 2 serial: நான் கிழிச்ச கோட்டை வீடு தாண்டாது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புதிய ப்ரமோ!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் தொடரின் இரண்டாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது.

Vijay TVs Pandian stores 2 serial next to next promos makes fans interesting

இதற்கான அடுத்தடுத்த ப்ரமோஷன்களை விஜய் டிவி அடுத்தடுத்து சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறது.

முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசம் மையமாக கொள்ளப்பட்ட நிலையில், இரண்டாவது சீசனில் தந்தை -மகன்களின் பாசம் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரின் அடுத்த ப்ரமோ வெளியீடு: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காணப்படுகிறது. இந்தத் தொடர் மொழிமாற்றம் இல்லாமல் நேரடியாக தமிழில் எடுக்கப்பட்டுள்ள தொடராக உள்ளது. இந்தத் தொடரில் அண்ணன் -தம்பிகள் நால்வரின் பாசம், பரிவு, அன்பு, அரவணைப்பு என அனைத்தையும் கதைக்களமாக கொண்டு அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்துவந்தார் இயக்குநர். அண்ணன் -தம்பிகள் மட்டுமில்லாமல் அவர்களது துணைகளின் ஒற்றுமையும் இந்தத் தொடரில் சிறப்பாக காட்டப்பட்டது.

இவர்கள் அனைவருக்கும் ஆதாரமாக மூத்த அண்ணன் மூர்த்தி மற்றும் அவரது மனைவி தனம் காணப்பட்டனர். 1500 எபிசோட்களை தாண்டி இந்தத் தொடர் ஒளிபரப்பான நிலையில், இன்னும் சில தினங்களில் எண்ட் கார்ட் போடவுள்ளது. இதையொட்டி தற்போது இந்த சீரியலின் கதைக்களம் காணப்படுகிறது. இந்த தொடர் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த சீசனை உடனடியாக துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது சீசனுக்கான அடுத்தடுத்த ப்ரமோக்களை சேனல் வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. முதல் சீசனின் அண்ணன் -தம்பிகளின் பாசம் கதைக்களமாக கொள்ளப்பட்ட நிலையில் இரண்டாவது சீசனில் தந்தை -மகன்கள் பாசம் மையமாக கொள்ளப்பட்டுள்ளது. இந்த சீசனிலும் மூர்த்தியாக ஸ்டாலினே நடிக்கவுள்ள நிலையில், அவரின் மனைவி தனமாக நடிகை நிரோஷா இணைந்துள்ளார்.

Vijay TVs Pandian stores 2 serial next to next promos makes fans interesting

இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் மகள்கள் இருப்பதாக ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது. அப்பாவின் பேச்சை மீறாத மகன்கள் மற்றும் குடும்பத்தினர் காட்டப்படுகின்றனர். அடுத்தடுத்த ப்ரமோக்களில் பிள்ளைகள் என்று வளர்த்தால் தன்னை போல வளர்க்க வேண்டும் என்று அப்பா மூர்த்தி அடிக்கடி கூறுவதையும் பார்க்க முடிகிறது. இதனிடையே, கோயிலுக்கு குடும்பத்தினருடன் மூர்த்தி வருவதை தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் காட்டப்படுகிறது.

அப்போது மூர்த்தி கட்டுக்கோப்பாக குடும்பத்தினரை வைத்துள்ளதாக சிலர் பாராட்டுகின்றனர். அப்போது ஒருவர், மகன்களுக்கு கல்யாணம் செய்து வைத்தால், இந்த கட்டுக்கோப்பு எல்லாம் போய்விடும் என்று கூறுகிறார். இதற்கு பதிலளிக்கும் மூர்த்தி, மருமகள்கள் வந்தாலும் தான் சொல்வதற்குதான் தன்னுடைய குடும்பம் தலையாட்டும் என்று நம்பிக்கையுடனும் உறுதியுடனும் கூறுகிறார். மூர்த்தியின் மகன்கள் மற்றும் மகள்கள், திருமண வயதில் உள்ள நிலையில், கதைக்களம் எப்படி போகும் என்பதை யூகிக்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X