Pandian stores 2: மீனாவை தொடர்ந்து ராஜிக்கும் வந்த நகை பார்சல்.. நெகிழ்ச்சியில் கண்கலங்கிய ராஜி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் சரவணன் -தங்கமயில் திருமணத்தையொட்டிய சம்பவங்களாக காணப்பட்டன. மீனாவிற்கு அவரது அம்மா நகைகளை கொண்டுவந்து கொடுத்து சென்றதையடுத்து ராஜிக்கும் அவரது அம்மா பழனிவேல் மூலம் நகைகளை கொடுத்து அனுப்புகிறார். இதை நம்பாமல் பார்க்கும் ராஜி ஒரு கட்டத்தில் மகிழ்ச்சி அடைகிறார்.

ஆயினும் முத்துவேலிற்கு தெரியாமல் கொடுத்து அனுப்பப்பட்ட அந்த நகைகளை திரும்ப அவர்களிடமே கொடுத்து விடும்படி கூறுகிறார் கதிர். இதையடுத்து பாண்டியனிடம் சரியாக வாங்கிக் கட்டி கொள்கிறார். ராஜியின் 100 சவரன் நகைகளை எடுத்து சென்று செலவழித்ததை பாண்டியன் சுட்டிக்காட்டி திட்டித் தீர்க்கிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.

Vijay TV s Pandian stores 2 serial today 13th May 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களால் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். செந்தில் மற்றும் கதிர் இருவருக்கும் அடுத்தடுத்து காதல் திருமணங்கள் நடந்த சூழலில் தடைபட்ட சரவணனின் திருமணம், தற்போது தங்கமயிலுடன் முடிவாகியுள்ளது. தங்கமயில் குடும்பத்தினர் தொடர்ந்து துவக்கம் முதலே பொய்களாக அடுக்குகின்றனர். எண்பது சவரன் நகை போடுவதாகவும், திருமண செலவுகளில் பாதியை ஏற்பதாகவும் சரவணனுக்கு 15 சவரன் நகை ஈடு செய்வதாகவும் பல விஷயங்களை அடுக்குகிறார் தங்கமயில் அம்மா பாக்கியம்.

ராஜியின் பிறந்தவீட்டு சீதனம்: சில நகைகள் தவிர்த்து மற்றவை அனைத்தையும் போலியாக வாங்கி அடுக்குகிறார் பாக்கியம். இந்த விஷயம் பாண்டியன் குடும்பத்தினருக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று தொடர்ந்து அச்சத்தில் உள்ளார் தங்கமயில். இது குறித்து தன்னுடைய அம்மாவிடமும் அவர் தொடர்ந்து தன்னுடைய பயத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பாண்டியனுக்கு திருமண செலவுகளில் பாதியை கொடுப்பதாக உறுதியளித்த சூழலில் அதற்கான தொகையை கடனாக வாங்கி வரும்படி தன்னுடைய கணவனிடம் கூறுகிறார் பாக்கியம். அவரும் எங்கெங்கோ அலைந்து திரிந்து வருகிறார்.

தங்கமயில் வீட்டு பிரச்சினை: மூன்று லட்சத்திற்கே இப்படி மல்லு கட்டுவதாக உள்ளதே என்று தன்னுடைய அச்சத்தை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார் தங்கமயில். இந்நிலையில் தன்னுடைய தைரியத்தில் பாதிகூட இல்லையே என்று தன்னுடைய மகளை பார்த்து பாக்கியம் கூறுகிறார். இதனிடையே ராஜியின் அம்மா பழனிவேலை அழைத்து சில நகைகளை கொடுத்து தன்னுடைய மகள் ராஜியிடம் கொடுக்குமாறு கூறுகிறார். திருமணம் ஏற்பாடுகள் நடந்து வரும் சூழலில் தன்னுடைய மகள் வெறும் கழுத்துடன் இருக்கக் கூடாது என்று அவர் பழனிவேலிடம் கூறுகிறார். இந்த நகைகளை எடுத்துவந்து ராஜியிடம் கொடுக்கிறார் பழனிவேல்.

பாண்டியனிடம் திட்டு வாங்கிய கதிர்: இதை பார்க்கும் கதிர், முத்துவேலுக்கு தெரியாமல் கொடுக்கப்பட்ட அந்த நகைகளை மீண்டும் அவர்களிடமே எடுத்துக் கொண்டு சென்று தரும்படி பழனிவேலிடம் கூறுகிறார். இதையடுத்து ராஜியின் திருமணத்தின்போது 100 சவரன் நகைகளை எடுத்துச் சென்று செலவழித்ததை சுட்டிக்காட்டும் பாண்டியன், ஆத்திரத்துடன் பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து உண்மையை கூற ராஜி முற்படுகிறார். அவரை தடுக்கும் வகையில் பேசும் கதிர், அப்போது செலவழிக்க தோன்றியது இப்போது திருப்பிக் கொடுக்க தோன்றுகிறது என்று தன் அப்பாவிடம் கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது,

இடித்து பேசிய குழலி: இந்நிலையில் அந்த நகைகளை திருப்பிக் கொடுத்தால் தன்னுடைய அம்மா மன வருத்தம் கொள்வார் என்று கூறுகிறார் ராஜி. அந்த நகைகளை தானே வைத்துக் கொள்கிறார். இந்நிலையில் திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள சூழலில் வீட்டிற்கு குழலி மற்றும் அவரது கணவர், குழந்தை உள்ளிட்டவர்கள் வருகின்றனர். இந்நிலையில் அவரது குழந்தையை தொட்டு தூக்கப் போகிறார் ராஜி. அதை பார்க்கும் குழலி திடீரென வந்து தூக்கினால் குழந்தை எப்படி வரும் என்று அவரை பேசுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X