Pandian stores 2: தூக்குச்சட்டிக்குள் பிணைந்த கைகள்.. ரொமான்ஸ் மோடில் சரவணன் -தங்கமயில்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்திருந்தது. பாண்டியனை குமரன் அடித்ததால் திருப்பி அடிக்க பாய்கிறார் கதிர். ஆனால் கோமதி, பாண்டியன் உள்ளிட்டவர்கள் இடையில் புகுந்து தடுத்து கதிரை வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர். இதனால் அந்தப் பிரச்சினை அப்போதைக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
ஆனாலும் தன்னுடைய அப்பா பாண்டியனை அடித்த குமரனை விட்டுவைக்கக்கூடாது என்பதில் கதிர் மிகவும் தீவிரமாக இருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய அண்ணன் செந்திலை கடையில் சென்று சந்தித்து நடந்ததை கூறுகிறார். இதனால் செந்திலும் ஆத்திரத்துடன் குமரனை வைத்து செய்ய வேண்டும் என்று கிளம்புகிறார். இதையடுத்து இருவரும் குமரனை தேடிப் புறப்படுகின்றனர். இதை பார்க்கும் பழனிவேலுக்கு விபரீதமாக பட அவர்களை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய்டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் துவங்கி சில மாதங்களே ஆன நிலையிலும் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக தொடர்ந்து டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் நிலைபெற்றுள்ளது. இந்த சீரியலில் பாண்டியன் -கோமதி தம்பதி மற்றும் அவர்களது மகன்கள், மகள்கள், கோமதியின் அண்ணன்கள் ஆகியோரை மையமாக வைத்து எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இன்றைய தினமும் இந்த சீரியலின் எபிசோட் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்திருந்தது. பாண்டியனை குமரன் அடித்த நிலையில் அவரை பழிவாங்க கங்கணம் கட்டுகின்றனர் கதிர் மற்றும் செந்தில்.
பாண்டியனை அடித்த குமரன்: தங்களது வீட்டிற்குள் வந்த ராஜியை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுகிறார் குமரன். இதன்போது ஏற்பட்ட தகராறில் தன்னுடைய தங்கையை அடிக்கிறார். இதை தடுக்க பாண்டியன் முயலும்போது குமரனின் அடி, அவர் மீது விழுகிறது. இதை பார்க்கும் கதிர், குமரனை அடித்துத் துவைக்க பாய்கிறார். ஆனால், இடையில் புகும் பாண்டியன், கோமதி மற்றும் மீனா ஆகியோர் கதிரை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர். ஆனால் இதில் சமாதானமாகாத கதிர், கடைக்கு சென்று தன்னுடைய அண்ணன் செந்திலிடம் நடந்ததை கூறுகிறார். இதனால் ஆத்திரமடையும் செந்தில், கதிருடன் இணைந்து குமரனை அடிக்க கங்கணம் கட்டுகிறார்.
சரவணன் கடைக்குவரும் தங்கமயில்: இருவரும் இணைந்து குமரனை தேடி செல்கின்றனர். இதை பார்க்கும் பழனிவேலுக்கு ஏதோ தவறாக தெரிய அவர்களை தடுத்து நிறுத்த முயல்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே, சரவணனின் கடை இருக்கும் இடத்தில் தன்னுடைய தோழியை பார்க்க வரும் தங்கமயில் இதுகுறித்து சரவணனிடம் கூறுகிறார். அவர், நேரில் சந்திக்கலாமா என்று கேட்க, சரவணனின் கடைக்கே வருகிறார் தங்கமயில். இதுகுறித்து கேள்விப்படும் தங்கமயிலின் அம்மா, சரவணனுக்கு கொழுக்கட்டை செய்து கொடுக்கிறார். தன்னுடைய கடையில் ஊழியர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் சரவணன்.
சிக்கிக்கொள்ளும் இதயங்கள்: தொடர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருக்க தான் கொண்டுவந்த கொழுக்கட்டையை சரவணனுக்கு சாப்பிட கொடுக்கிறார் தங்கமயில். அப்போது தங்கமயிலையும் சாப்பிட சொல்கிறார் சரவணன். இதன்போது இருவரும் ஒரே நேரத்தில் தூக்குச்சட்டியில் கையை விட, கைகள் சிக்கிக் கொள்கின்றன. அவர்களின் மனதும்தான். இவ்வாறு இன்றைய எபிசோடில் காட்டப்பட்டது. பாண்டியனை குமரன் அடித்ததால் அவரை தேடி தாக்க செந்தில் மற்றும் கதிர் முயற்சித்துவரும் சூழலில் அவர்களின் எண்ணம் நிறைவேறுமா, இதனால் சரவணனின் திருமணம் பாதிக்கப்படுமா என்பதை வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











