Pandian stores: குழந்தை பிறந்தநேரம் சரியில்லையா.. கொளுத்திப்போட்ட சித்தி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்தத் தொடர் சேனலின் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று இரண்டாவது தொடராக நிலை கொண்டுள்ளது.

அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடரில் அவர்களின் மனைவிகளும் குடும்ப ஒற்றுமைக்கு துணையாக இருப்பதே சிறப்பாக காணப்படுகிறது.

Vijay TVs Pandian stores new episode makes fans thrilling

குழந்தை பிறந்த நேரத்தை சரிபார்க்க சொல்லும் சித்தி கஸ்தூரி: விஜய் டிவியின் சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பியிலும் முன்னணி இடத்தை பிடித்து வருகின்றன. இந்த சேனலின் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என அடுத்தடுத்த தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. இதில் தமிழில் உருவாகியுள்ள தொடர் என்ற பெருமை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு உள்ளது. அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் என அடுத்தடுத்த நான்கு சகோதரர்கள், அவர்களின் மனைவிகள், குழந்தைகள் என இந்தத் தொடர் இவர்களின் பிரச்சினைகள், ஒற்றுமை, பிரிவு என அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. கூட்டுக் குடித்தனங்கள் குறைந்துள்ள இந்த காலகட்டத்தில், அந்த வாழ்க்கையை நம் கண்முன்னே வைத்துவரும் இந்தத் தொடர் ரசிகர்களை கவர்ந்துள்ளதில் வியப்பில்லை என்றே தெரிகிறது.

Vijay TVs Pandian stores new episode makes fans thrilling

கூட்டுக் குடும்பமாக வாழும் ஏக்கம் அனைவருக்குள்ளும் இருக்கலாம். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இது சாத்தியப்படாத நிலையில், அதை சாத்தியப்படுத்திக் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக இவர்கள் மூன்று குடும்பமாக பிரிந்த நிலையில், தற்போது கண்ணன், மீண்டும் தன்னுடைய அண்ணன்களுடன் இணைந்துள்ளார்.

தனிக்குடித்தனம் போன கண்ணன், அளவிற்கதிகமான கடனை வாங்கி, அதன்மூலம் ஏற்பட்ட தகறாரில் கதிர் சிறைக்கு செல்ல காரணமாக அமைந்தார். இந்நிலையில், தான் வாங்கிய கடனுக்காக, அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் கதிர், தற்போது தன்னுடைய மேலதிகாரியால் வஞ்சகமாக மாட்டிக் கொள்கிறார். இந்த முறை அவர் லஞ்சம் வாங்காமலே மாட்டிக் கொள்கிறார். அவர் சிறைக்கு சென்றதால், கர்ப்பமாக இருந்த அவரது மனைவி ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது.

Vijay TVs Pandian stores new episode makes fans thrilling

தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறக்க, இந்த நேரத்தில் கண்ணன் சிறையில் உள்ளது குடும்பத்தினரை மிகுந்த பரிதவிப்பிற்கு உள்ளாக்குகிறது. இதையடுத்து ஐஸ்வர்யா வீடு திரும்புகிறார். அப்போது பேசும் அவரது சித்தி கஸ்தூரி, குழந்தை பிறந்தநேரம் சரியில்லாததால்தான் கண்ணனுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டு வேலையும் பறிபோனதாக கூறுகிறார். இதை கேட்கும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர்.

தொடர்ந்து தன்னிடம் கடன் வாங்கிக் கொடுக்க சொல்லி தன்னை கடன்காரர்களிடம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் மாட்டி விட்டுவிட்டதாகவும் அவர் புலம்புகிறார். கொஞ்சமான ஆட்டமா இருவரும் ஆடினார்கள், தன்னையும் மாட்டி விட்டார்கள் என்றும் அவர் தொடர்ந்து பேச உடனிருக்கும் தனம் அவரை சமாதானப்படுத்துகிறார். அவரது பணத்திற்கு தான் உத்தரவாதம் என்றும் கூறுகிறார். இதனால் கஸ்தூரி, ஆசுவாசமடைவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X