Pandian stores: நிறைவடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.. தனம் வெளியிட்ட குடும்ப புகைப்படம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பல ஆண்டுகளாக மாஸ் காட்டி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடர் 1300 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகிவரும் நிலையில் விரைவில் எண்ட் கார்ட் போடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்த ஜனார்த்தனன் தற்போது நினைவு திரும்பி, வாக்குமூலம் கொடுத்த நிலையில் கொலை முயற்சி வழக்கில் சிறையில் இருந்த ஜீவா மற்றும் கதிர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Vijay TVs Pandian stores serial going to end soon and Actress Sujitha shares family photo

விரைவில் நிறைவடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து சேனலில் முன்னிலை பெற்று வருகிறது. கடந்த வாரத்திலும் இந்தத் தொடர் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தத் தொடர், விரைவில் எண்ட் கார்ட் போடப்பட உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. மீனாவின் அப்பா ஜனார்த்தனனை கொலை செய்ய பிரஷாந்த் முயற்சித்த நிலையில், அந்தக் கொலை முயற்சி மற்றும் மேனேஜர் கொலை ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டு ஜீவா மற்றும் கதிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்கும்வகையில், ஜனார்த்தனனை மருத்துவமனையில் வைத்து கொலை செய்ய பிரஷாந்த் முயற்சித்த நிலையில், அதை வீடியோவாக மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் எடுத்தனர். இந்த வீடியோ ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பித்த நிலையில், ஜீவா மற்றும் கதிரை விடுவிக்க இந்த ஆதாரம் போதாது என்று நீதிபதி கூறுகிறார். தொடர்ந்து ஜனார்த்தனர் உயிர்பிழைத்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் அல்லது பிரஷாந்த் கைதாக வேண்டும் என்றும் கூறுகிறார்.

இதனிடையே, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜனார்த்தனருக்கு நினைவு திரும்புகிறது. இதையடுத்து பிரஷாந்த் தான் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் வாக்குமூலம் அளிக்கிறார். இதையடுத்து இந்த ஆதாரத்தை கோர்ட்டில் மூர்த்தி சமர்ப்பிக்கிறார். தொடர்ந்து ஜீவா மற்றும் கதிரை விடுவிக்கும் நீதிபதி, விரைவில் பிரஷாந்தை கைது செய்யவும் போலீசாரிடம் வலியுறுத்துகிறார்.

ஜீவா மற்றும் கதிர் விடுவிக்கப்பட்ட நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அதை கொண்டாடுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. மேலும் விரைவில் இந்த தொடர் எண்ட் கார்ட் போடப்பட உள்ள நிலையில், குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது தனமாக நடித்துவரும் சுஜிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஜனார்த்தனர் தலையில் கட்டு போட்டபடி காணப்படுகிறார்.

Vijay TVs Pandian stores serial going to end soon and Actress Sujitha shares family photo

இந்தப் புகைப்படம்தான் தன்னுடைய பெஸ்ட் மற்றும் ஸ்பெஷல் செல்பி என்றும் சுஜிதா குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தது குறித்து மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து கண்டிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரையும் மிஸ் செய்வோம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X