Pandian stores serial: Fantastic Four.. குடும்ப புகைப்படங்களை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டீம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளது.

அண்ணன் -தம்பிகளின் பாசத்தை சொல்லும் இந்த சீரியலில் குடும்ப உறவுகளின் மகத்துவமும் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

Vijay TVs Pandian stores serial going to end soon and the actors enjoying the moment

இதனிடையே இன்னும் சில தினங்களில் இந்தத் தொடர் நிறைவு செய்யப்பட்டு சீரியலின் இரண்டாவது பாகம் துவங்கவுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் கொண்டாட்டம்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பல மாதங்களாக மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடர் அண்ணன் -தம்பிகளின் பாசம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை கதைக்களமாக கொண்டு 1500 எபிசோட்களை தாண்டி ரசிகர்களை கவர்ந்து வத் நிலையில், இன்னும் சில தினங்களில் எண்ட்கார்ட் போடவுள்ளது. நிகழ்ச்சியில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், லாவண்யா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தனர்.

தற்போது தன்னுடைய இரண்டாவது மருமகன் பிரஷாந்தால் கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட நிலையில், அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஜனார்த்தனர் குணமடைந்துள்ளார். அவரை கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜீவா மற்றும் கதிரை நீதிமன்றம் விடுவித்துள்ள நிலையில் குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர். பிரிவினைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் மீண்டும் வாழத் துவங்கியுள்ளனர்.

இதனிடையே தலைமறைவாக உள்ள பிரஷாந்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஜனார்த்தனன் உடல்நிலை தேறிய நிலையில், பிரஷாந்த் அனைத்து பணத்தையும் அபகரித்ததால் மருத்துவமனை பில்லை செட்டில் செய்ய திணறுகிறார். இந்நிலையில், அவரது மருத்துவமனை பில்லை செட்டில் செய்கிறார் கதிர். இதனால் நெகிழ்ச்சியடைகிறார் ஜனார்த்தனன். தன்னுடைய தம்பிகளை மூர்த்தி மிகச்சிறப்பாக வளர்ந்ததுள்ளதாக பாராட்டு தெரிவிக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய மருமகன் பிரஷாந்தின் செயலால், தன்னுடைய இளைய மகளின் வாழ்க்கை பாழாகிவிட்டதாக கதறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. இதனிடையே விரைவில் நிறைவடையவுள்ள இந்தத் தொடரின் நிறைவு அதன் கேரக்டர்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடியுள்ளனர். அவர்கள் இணைந்து அடுத்தடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். சுஜிதா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் Fantastic Four என்று தனம், முல்லை, மீனா மற்றும் ஐஸ்வர்யா இணைந்துள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதேபோல மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் இணைந்துள்ள புகைப்படங்களை குமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனிடையே இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் குறித்த அறிவிப்பை விஜய் டிவி இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. இதில் தந்தை -மகன் உறவை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்துள்ளது. இதில் மூர்த்தியாக ஸ்டாலினே நடித்துள்ள நிலையில் தனமாக நடிகை நிரோஷா களமிறங்கியுள்ளார். இதன் ப்ரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X