Pandian stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இறுதி வாரம்.. அழகான ப்ரமோ வெளியீடு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்தத் தொடரின் இறுதி வாரத்தை குறிக்கும் வகையில் அழகான ப்ரமோ ஒன்றை சீரியல் தரப்பு தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தப் ப்ரமோவில், இது முடிவல்ல என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இன்னும் ஒரு அழகான கூட்டுக்குடும்ப கதையை நோக்கிய தொடக்கம் என்றும் ப்ரமோவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வாரத்துடன் நிறைவடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபோட்டு வந்தது. இந்த தொடரில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை, அரவணைப்பை கதைக்களமாக கொண்டிருந்தார் இயக்குநர். மேலும் அண்ணன் -தம்பிகள் மட்டுமில்லாமவ் அவர்களது குடும்பத்தினரும் ஒற்றுமையாக இருப்பதையும் இந்தத் தொடரில் காண முடிந்தது. தமிழில் நேரடியாக உருவான தொடர் என்ற பெருமையும் இந்தத் தொடருக்கு இருந்தது.
1500 எபிசோட்கள்: இந்நிலையில் 1500 எபிசோட்களை தாண்டி ஒளிப்பரப்பாகி வந்த இந்தத் தொடர் தற்போது எண்ட் கார்ட் போடவுள்ளது. இந்த வாரத்தில் இந்தத் தொடர் நிறைவடையவுள்ளதாக சீரியல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரின் அடுத்த சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்திருந்த நிலையில், அடுத்த சீசனில் தந்தை -மகன்கள் பாசத்தை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: இரண்டாவது சீசனுக்கான ப்ரமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த இரண்டாவது சீசனில் மூர்த்தியாக ஸ்டாலினே நடித்துள்ள நிலையில், தனமாக நடிகை நிரோஷா நடித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவடைந்தவுடனேயே அடுத்த சீசன் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வரும் வாரத்தோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவடையவுள்ளதாக தற்போது விஜய் டிவி ப்ரமோ வெளியிட்டுள்ளது.
முடிவல்ல.. தொடக்கம்: குடும்பம்னா இப்படித்தான் இருக்கனும்னு ஊரே சொல்லும்படியாக எங்களோட குடும்பத்தின் வாழ்க்கை இருந்தது என்று அந்த ப்ரமோவில் மகிழ்ச்சியை குடும்பத்தினர் பகிர்ந்துக் கொள்கின்றனர். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக ரசிகர்களின் இல்லங்களிலும் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் உணர்ச்சிகரமான நிறைவுப் பகுதியை காணத்தவறாதீர்கள் என்றும் இது முடிவல்ல, இன்னும் ஒரு அழகான கூட்டுக்குடும்ப கதையை நோக்கிய தொடக்கம் என்றும் அந்த ப்ரமோவில் கூறப்பட்டுள்ளது.
அப்பா -மகன்கள் உறவு: அடுத்த சீசனில் அப்பா -மகன்கள் உறவை கதைக்களமாக கொண்டு தொடர் உருவாகியுள்ளது. இதில் தன்னுடைய குடும்பத்தை கட்டுக் கோப்பாக வைத்துள்ள மூர்த்தி, புள்ளைன்னு வளர்த்தா தன்னைப்போலத்தான் வளர்க்கனும் என்று மார்தட்டிக் கொள்கிறார். ஆனால், மகன்களுக்கு மருமகள்கள் வந்தால் தெரியும் சேதி என்று ஒருவர் கூற, மருமகள்கள் வந்தாலும் தான் சொல்லும்படிதான் தன்னுடைய குடும்பத்தினர் இருப்பார்கள் என்று அவர் கூறுவதாக ப்ரமோ வெளியாகியுள்ளது. இது இந்த தொடர் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











