Pandian stores: நிறைவுக்கு வந்த மீனா -முல்லையின் உலகப்போர்.. குழப்பத்தில் ஜீவா -கதிர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் நிறைவுப்பகுதியை எட்டவுள்ளது.
சீரியலின் அடுத்தடுத்த பிரச்சினைகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், அனைவரும் தற்போது ஒற்றுமையுடன் உள்ளதாக காட்டப்பட்டுள்ளது.
அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடரின் அடுத்த பாகமும் உடனடியாக துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய எபிசோடால் ரசிகர்கள் உற்சாகம்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இந்தத் தொடரின் கதைக்களமாக அண்ணன் -தம்பிகளின் பாசம், அரவணைப்பு உள்ளிட்டவை கொள்ளப்பட்டுள்ள நிலையில் 1500 எபிசோட்களை தாண்டி இந்தத் தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தொடர் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அனைத்து பிரச்சினைகளையும் நிறைவு செய்துவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சந்தோஷ தருணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தத் தொடரில் ஜனார்த்தனனை கொலை செய்ய பிரஷாந்த் முயன்ற நிலையில், அந்த பழியை தூக்கி ஜிவா மற்றும் கதிர் மீது சுமத்துகிறார். இதனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களை மீட்க போராடுகிறார் மூர்த்தி, அவர் வெளியிட்ட வீடியோ ஆதாரம் போதாத நிலையில், ஜனார்த்தனும் உயிர் பிழைத்து சாட்சி அளிக்க, ஜீவா மற்றும் கதிர் குற்றமற்றவர்களாக கூறப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

முன்னதாக தன்னுடைய அப்பாவை ஜீவா மற்றும் கதிர் இணைந்து கொலை செய்ய முயன்றதாக கருதும் மீனா, அதையடுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். தன்னை சமாதானம் செய்ய வரும் குடும்பத்தினரை அவமதித்து அனுப்புகிறார். தற்போது உண்மை தெரிந்து அவர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார். ஆனாலும் அவர் பேசிய பேச்சை மன்னிக்க முடியாது என்று முல்லை கூறுகிறார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் முற்றுகிறது.
இதையடுத்து அங்குவரும் ஜீவா மற்றும் கதிர் இருவரும், அவர்களது உலகப்போர் கண்டிப்பாக தீராது என்று குழப்பமடைந்து, அவர்களை சமாதானப்படுத்த தனத்தை அழைத்து வருகின்றனர். ஆனால் அவர்கள் பார்க்கும் காட்சி அவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. மீனா மற்றும் முல்லை இருவரும் கொஞ்சிக் கொண்டு நிற்கின்றனர். அடுத்த வேளை சமையல் குறித்து அவர்கள் அழகாக பேசிக் கொண்டு நிற்பதை பார்த்து மலைத்து போகின்றனர் ஜீவா மற்றும் கதிர்.

அவர்களிடம் தனம் சண்டை குறித்து கேட்க, சண்டையா நாங்களா என்று அவர்கள் கூறுகின்றனர். இதைப்போய் உலகப்போர் அளவிற்கு தாங்கள் பில்டப் செய்து விட்டோமே என்று ஜீவா மற்றும் கதிர் கூறுகின்றனர். இன்னும் கொஞ்சநேரம் அங்கே இருந்தால், தங்களை முட்டாளாக்கிவிடுவார்கள் என்றும் அவர் கூறிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகின்றனர். தொடர்ந்து மல்லியை வைத்து தனத்தை குடும்பத்தினர் வெறுப்பேற்றுவதையும் இன்றைய எபிசோடில் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











