Pandian stores: என் குழந்தைகளை நீ பார்த்துப்பியா.. மீனாவை கண்கலங்க வைத்த தனம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
நான்கு அண்ணன் -தம்பிகளின் ஒற்றுமையை பேசும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்தத் தொடர் விஜய் டிவியில் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனத்திற்கு உறுதியான நோய் பாதிப்பு: விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு எப்போதுமே சிறப்பான இடம் காணப்படுகிறது. சகோதர பாசத்தை மையமாக கொண்டு, 4 அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது ஒற்றுமையை இந்தத் தொடர் பேசுகிறது. தமிழில் உருவாகியுள்ள தொடர் என்ற பெருமையையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பெற்றுள்ளது. அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து ரசிகர்களை இந்தத் தொடர் வெகுவாக கவர்ந்து வருகிறது.

நான்கு பேரும் தங்களின் துணையுடன் ஒரே வீட்டில் இருந்த நிலையில், குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜீவா மற்றும் கண்ணன் இருவரும் பிரிந்து சென்றனர். இதில் கடைசி தம்பி கண்ணன் அதிகமாக கடன் வாங்கிய பிரச்சினையில், மீண்டும் அண்ணன்களுடன் இணைந்துள்ளார். ஜீவா மற்றும் மீனா மட்டும் தனியாக உள்ளனர். இதனிடையே, கடந்த சில வாரங்களாக, தங்களின் எதிரியால் கீழே தள்ளப்பட்டு, கர்ப்பமாக இருந்த முல்லை பெரிய பிரச்சினைக்கு பிறகு பெண் குழந்தையை பெற்று நலமுடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக நெஞ்சில் வலி என்று கூறிவந்த தனத்திற்கு, தற்போது கேன்சர் இரண்டாவது ஸ்டேஜ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மிகுந்த பரிதவிப்பிற்கு உள்ளாகியுள்ளார். தனக்கு சிறிய பிரச்சினை என்றாலும் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகும் தன்னுடைய கணவன் மூர்த்தி, இந்த விஷயத்தை எப்படி தாங்குவார் என்று அவர் அழுகிறார். மேலும் தன்னுடைய மகன் பாண்டியன் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையின் நிலை என்னவாகும் என்றும் கதறுகிறார்.
தனம் குறித்த உண்மை, மீனாவிற்கு தெரியவந்த நிலையில், தனத்துடன் செக்கப்பிற்கு சென்ற மீனா, மருத்துவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகிறார். ஆனாலும் தன்னுடைய அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தனத்திற்கு ஆறுதல் கூறுகிறார். டாக்டர் சொன்னது போல, சரியான மருந்துகளையும் சிகிச்சையையும் மேற்கொண்டு இதிலிருந்து தப்பிக்கலாம் என்று மீனா தனத்திடம் கூறுகிறார். ஆனாலும் தனம் சமாதானமடையவில்லை.
தன்னுடைய குழந்தைகளின் நிலை என்னவாகும் என்றும் கூறும் தனம், தன்னுடைய குழந்தைகளை மீனா, பார்த்துக் கொள்வாரா என்று கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து தனத்தை சமாதானப்படுத்தும் மீனா, தன்னுடைய அப்பா வீட்டிற்கு அவரை அழைத்து வருகிறார். அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று மீனா கூறும் நிலையில், ஜீவா அங்கு இருக்கிறார். தனம் திடீரென தன்னுடைய மாமனார் வீட்டிற்கு வந்தது அவருக்கு சந்தேகத்தை எழுப்புகிறது. இவ்வாறாக தற்போதைய எபிசோட்கள் காணப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











