Pandian stores: அக்காவுக்கு தான் கேன்சர்.. குடும்பத்தினரிடம் உண்மையை போட்டுடைத்த ஐஸ்வர்யா!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முன்னணி தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து காணப்படுகிறது.

அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்ட இந்தத் தொடரில் 4 அண்ணன், தம்பிகளின் பாசம், அன்பு, அரவணைப்பு, பிரச்சினைகள் மையமாக கொள்ளப்பட்டுள்ளன.

Vijay TVs Pandian stores Serial new promo makes everyone shocking

சமீபத்தில் புதுமனை புகுவிழா நடைபெற்ற நிலையில், பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு நான்கு பேரும் தங்களின் குடும்பத்தினருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வாழத் துவங்கியுள்ளனர்.

தனம் குறித்த உண்மையை போட்டுடைத்த ஐஸ்வர்யா: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சேனலின் முன்னணி தொடர்களில் ஒன்றாக சிறப்பான டிஆர்பியுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து பல எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அண்ணன், தம்பிகள் மட்டுமில்லாமல் அவர்களுடன் வாழ வந்த மனைவிகளும் குடும்பத்தின் ஒற்றுமைக்காக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக குடும்ப ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் தனம் சிறப்பான கவனத்தை பெற்று வருகிறார்.

Vijay TVs Pandian stores Serial new promo makes everyone shocking

ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் பிரச்சினைகளையும் இந்தத் தொடர் சிறப்பாக காட்சிப்படுத்தி வருகிறது. 4 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒரே வீட்டில் இருப்பது சலசலப்புகளை ஏற்படுத்தினாலும் அதை பொருட்படுத்தாத மனநிலையை அனைவரும் கொண்டிருப்பதும் இந்தத் தொடரின் சிறப்பாக பார்க்க முடிகிறது. இந்த காலத்தில் இதுபோன்ற ஒரு குடும்பம் சாத்தியமா என்ற கேள்வியையும் இந்தத் தொடர் தொடர்ந்து ரசிகர்களிடையே ஏற்படுத்தி வருகிறது. தமிழில் நேரடியாக ஒளிபரப்பாகி வரும் தொடர் என்ற பெருமையையும் இந்தத் தொடர் பெற்றுள்ளது.

ஒரு பிரச்சினையால் பிரிந்த அண்ணன் -தம்பிகள் தற்போது ஒன்றாக சேர்ந்துள்ளனர். புதிதாக கட்டிய வீட்டிற்கான புதுமனை புகுவிழாவில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். ஜீவாவின் மைத்துனர், அவரை சட்டையை பிடித்து கேள்வி கேட்டபோது, ஆத்திரத்தில் பொங்கிய மூர்த்தியை பார்க்க முடிந்தது. இந்த நிகழ்வையடுத்து தற்போது புதிய வீட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

Vijay TVs Pandian stores Serial new promo makes everyone shocking

இதனிடையே கண்ணனின் மேலதிகாரியால் பறிபோன அவரது வேலைக்கான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று இன்றைய எபிசோடில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கண்ணன் மட்டுமில்லாமல் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த அனைவரும் அப்செட் ஆகியுள்ளனர். இந்த தீர்ப்பிற்காக சாப்பிடாமல் விரதம் இருந்த அண்ணன் மூர்த்திக்கும் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது வருத்தத்தை அளித்துள்ளது.

தனத்திற்கு மார்பக புற்றுநோய் பாதித்த நிலையில், உடல்நிலை சரியில்லாத தன்னுடைய கணவனுக்கு இதை தெரிவிக்காமல் மறைக்கிறார். இந்த விஷயம் தெரிந்த மீனா மற்றும் முல்லையின் உதவியுடன் முதல்கட்ட ஆபரேஷனும் நடந்து முடிகிறது. இந்நிலையில் இந்த விஷயம் கதிருக்கும் தெரியவருகிறது. அடுத்தக்கட்ட ஆபரேஷனுக்கு அதிகமான பணம் தேவைப்படும் நிலையில் அதற்காக, தங்களின் சூப்பர்மார்க்கெட்டை விற்கும் முடிவிற்கு அவர் வருகிறார்.

Vijay TVs Pandian stores Serial new promo makes everyone shocking

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில், தனத்தின் இந்த நோய்குறித்து தெரியவரும் ஐஸ்வர்யா, அழுகையினூடே, இதை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிடுகிறார். இதைப் பார்க்கும் மூர்த்தி உள்ளிட்ட குடும்பத்தினர், அதிர்ச்சியுடன் ஐஸ்வர்யாவிடம் இதுகுறித்து கேட்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களின் மகளுக்கு இதுபோன்று நேர்ந்ததா என்று விசாரிக்கின்றனர். ஆனால், தனத்திற்குத்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐஸ்வர்யா அழுகையினூடே மூர்த்தியிடம் கூறுவதாக ப்ரமோவில் காணப்படுகிறது. மனைவியிடம் மிகுந்த பாசம் கொண்ட மூர்த்தி இதனால் மிகுந்த அதிர்ச்சியடைகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X