Siragadikka Aasai: பாக்கியலட்சுமி தொடரை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி தொடர்.. என்ன இப்படி ஆயிடுச்சு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக பாக்கியலட்சுமி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஏராளமான ரசிகர்களையும் கவர்ந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வந்த பாக்கியலட்சுமி தொடரில் தொய்வு காணப்படுகிறது.
பாக்கியா கல்லூரியில் இணைந்த கதையையே முக்கியமாக இந்தத் தொடர் தற்போது ஒளிபரப்பி வருகிறது. இதனால் ரசிகர்கள் சலிப்படைந்துள்ளனர்.

பாக்கியலட்சுமி தொடரை பின்னுக்கு தள்ளிய சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து மாஸ் காட்டி வந்தது பாக்கியலட்சுமி சீரியல். இந்தத் தொடரில் தன்னை ஏமாற்றி விவாகரத்து பெற முயன்ற கணவனின் திட்டம் தெரிந்து அவர் கேட்ட விவாகரத்தை தானே முன்வந்து கொடுத்தார் பாக்கியா. தொடர்ந்து தன்னை முன்னேற்றி வருகிறார். கேன்டின், கேட்டரிங், மசாலா வியாபாரம், ஆங்கில வகுப்பு, குடும்பம் என தன்னை தொடர்ந்து பிசியாக வைத்துக் கொண்டிருந்தார்.
அவரது இந்த போராட்ட குணம், கணவன் பேரில் இருந்த வீட்டை மீட்கவும் உதவியாக இருந்தது. தன்னுடைய சக்திக்கு மீறி, சமையல் கான்டிராக்டை எடுத்து, பிள்ளைகளின் உதவியுடன் வீட்டை மீட்டு, தன்னுடைய பெயரில் ரிஜிஸ்டரும் செய்கிறார். தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தின் நலனை கவனத்தில் கொண்டு செயல்படும் பாக்கியா, இடையில் தன்னுடைய ஆசைகளையும் செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் தன்னை முன்னேற்றிக் கொள்ளும் அவரது கனவும் நிறைவேறி வருகிறது.
இதனிடையே, தன்னுடைய தந்தையின் இறப்பால் தன்னுடைய கைநழுவிப் போன, கல்லூரிக் கனவை செயல்படுத்துகிறார். தன்னுடைய மகளின் கல்லூரியிலேயே தானும் சேர்ந்து படிக்கிறார். இதனால் இனியாவிற்கு சில சங்கடங்கள் ஏற்படுவதாகவும், காசிக்கு போன பாக்கியாவின் மாமியார் மீண்டும் திரும்பிய நிலையில், அவர் பாக்கியாவின் கல்லூரிக் கனவை ஏற்பதையும் கடத்ந சில தினங்களாக இந்தத் தொடர் கதைக்களமாக ஒளிபரப்பி வந்தது.

அடுத்தடுத்து கல்லூரியையும் பாக்கியாவையும் சுற்றியே கதைக்களம் காணப்படும் நிலையில், அடுத்தடுத்து எபிசோட்கள் பரபரப்பு இல்லாமல் போரடித்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து அர்பன் கேட்டகரியில் மற்ற சேனல்களின் சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருந்த பாக்கியலட்சுமி தொடரை தற்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் பீட் செய்துள்ளது. Urban categoryயில் 9.2 மற்றும் Urban + Rural categoryயில் 7.93 புள்ளிகள் பெற்று சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்தத் தொடரில் சமீபத்தில் திருமண காட்சிகள் ஒளிபரப்பாகின. திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தொடரில் மீனாவாக நடித்துவரும் நாயகியின் இயல்பான நடிப்பும் முத்து கேரக்டரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கணவனுக்காக அவர் செய்யும் செயல்கள் அவருக்கே விரோதமாக அமைவதாக தற்போது எபிசோட்கள் காணப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











