Siragadikka Aasai: மீண்டும் முதலிடத்தை விட்டுக் கொடுத்த பாக்கியலட்சுமி.. முன்னணியில் சிறகடிக்க ஆசை!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து தன்னுடைய முதலிடத்தை இந்த வாரமும் விட்டுக் கொடுத்துள்ளது.

தொடர்ந்து விஜய் டிவியில் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று சிறகடிக்க ஆசை தொடர் முன்னிலையில் உள்ளது.

சிறகடிக்க ஆசை தொடர்ந்த அர்பன் கேட்டகரியில் 8.3 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் பாக்கியலட்சுமி 7.7 புள்ளிகள் மட்டுமே பெற்று கீழிறங்கியுள்ளது.

Vijay TVs Siragadikka Aasai serial tops in Urban Category

விஜய் டிவியில் முதலிடத்தில் நீடிக்கும் சிறகடிக்க ஆசை: இந்த வார Urban மற்றும் Rural கேட்டகரியில் முதலிடங்களை பிடித்த சீரியல்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்த சேனல்களின் சீரியல்களில் கயல் சீரியல் மீண்டும் எதிர்நீச்சல் சீரியலிடம் விட்டுக் கொடுத்த முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த 32வது வாரத்திற்கான பட்டியலில் கயல், எதிர்நீச்சல், வானத்தை போல, சுந்தரி மற்றும் இனியா என அடுத்தடுத்த சன் டிவி தொடர்கள் தொடர்ந்து முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

இதனிடையே விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் இதில் 7, 8 மற்றும் 11வது இடங்களையே பிடிக்க முடிந்துள்ளது. சீரியல்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை சன் டிவியும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களும் பிடித்துள்ளன. அனைத்து சேனல்களும் நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை சீரியல்களுக்கும் கொடுத்து வருகின்றன.

Vijay TVs Siragadikka Aasai serial tops in Urban Category

வீட்டில் உள்ள பெண்கள், ஆண்கள் என சீரியல்களை அதிகமானோர் விரும்பி பார்க்கின்றனர். வேலைக்காக வெளியில் செல்பவர்களும் ஹாட்ஸ்டார் உள்ளிட்டவற்றின் மூலமாக சீரியல்களை பார்த்து விடுகின்றனர். இதனால் ஒவ்வொரு சேனலும் அதிக மெனக்கெடல்களை சீரியல்களுக்காக செய்து வருகின்றன. ஒரு தொடருக்கு சரியான டிஆர்பி கிடைக்கவில்லை என்றால் உடனடியாக அதற்கு மூடுவிழா நடத்தப்பட்டு, அந்த இடத்தில் புதிய தொடர் களமிறங்குகிறது.

விஜய் டிவியை பொறுத்தவரை இந்த வாரமும் தன்னுடைய முதலிடத்தை பாக்கியலட்சுமி தொடர் விட்டுக் கொடுத்துள்ளது. கடந்த பல மாதங்களாக இந்தத் தொடர், தொடர்ந்து சேனலில் முதலிடத்தை பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தத் தொடரின் எபிசோட்கள் தொய்வடைந்த நிலையில், தற்போது சேனலின் சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருமண நிகழ்வுகள் உள்ளிட்டவற்றின்மூலம் இந்தத் தொடர் முதலிடத்தை பிடித்துள்ளது.

Vijay TVs Siragadikka Aasai serial tops in Urban Category

இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் கோபி இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களை அதிகமாக கவரும். அவரது ரியாக்ஷன்களை ரசிகர்கள் அதிகமான விரும்பி பார்க்கும் நிலையில், கடந்த சில தினங்களாக அவர் தொடரில் அதிகமாக காணப்படவில்லை. மாறாக, இனியா மற்றும் பாக்கியா இருவரும் கல்லூரியில் சேரும் காட்சிகளே அதிகமாக ஒளிபரப்பானது. இதனால் இந்தத் தொடர், கடந்த சில தினங்களாக ரசிகர்களை கவரத் தவறிவிட்டது.

இதனிடையே தொடர் துவங்கப்பட்டு முதல் வாரத்திலேயே 11வது இடத்தில் இடம்பிடித்துள்ளது விஜய் டிவியின் கிழக்கு வாசல் தொடர். ராதிகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த சீரியல் முதல் வாரத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்களுடன் இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் வரும் வாரங்களில் இந்தத் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றத்தை காணும் என எதிர்பார்க்கலாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X