Thamizhum Saraswathiyum: செஞ்ச பாவத்துக்கு அனுபவிக்கிறாங்க.. சரஸ்வதியை திட்டித்தீர்க்கும் ராகினி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம்பெற்று வருகிறது தமிழும் சரஸ்வதியும் தொடர்.

இந்தத் தொடரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அம்மா கோதை மற்றும் மகன் தமிழ் அசோசியேஷன் தேர்தலில் நின்ற நிலையில், அந்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பியிலும் முன்னிலை பெற்றது.

தற்போது அர்ஜூனின் உண்மை முகத்தை அறிந்துக் கொள்கிறார் கோதை. அவரது ஒவ்வொரு விஷயத்தையும் தொடர்ந்து கண்காணிக்கிறார்.

Vijay TVs Thamizhum Saraswathiyum serial new promo makes fans thinking on it

சரஸ்வதியை திட்டித் தீர்க்கும் ராகினி: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் தமிழும் சரஸ்வதியும் தொடரும் முக்கியமான இடத்தை பெற்று வருகிறது. இந்தத் தொடரில் கோதை இன்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் கோதை, அவரது கணவர் மற்றும் அவரது மகன் தமிழ், கார்த்திக், மகள் ராகினி அவரது கணவர் அர்ஜூன், அவரது சொந்தங்கள் என அதிகமான கேரக்டர்கள் காணப்படுகின்றனர். இந்தக் கேரக்டர்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அடுத்தடுத்த எபிசோட்களை இயக்குநர் கொடுத்து வருகிறார்.

கோதை குடும்பத்தை கெடுக்கும் வகையில் அர்ஜூன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். கோதையின் மகள் ராகினியை திருமணம் செய்யும் அர்ஜூன், தான் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய குடும்பத்தினரையும் கோதை வீட்டுடனேயே தங்க வைத்துள்ளார். தொடர்ந்து கோதை குடும்பத்தினரை பிரிக்கும் சூழ்ச்சியையும் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழ், தன்னை கொல்ல வந்ததாக தன்னுடைய மனைவியை மட்டுமில்லாமல் குடும்பத்தினரையும் நம்ப வைக்கிறார்.

இதையடுத்து, தமிழ் அவரது மனைவி சரஸ்வதி இருவரும் வீட்டைவிட்டு துரத்தப்படுகின்றனர். அவரை விரோதியாக பார்க்கின்றனர். இதனிடையே, தமிழின் அப்பாவிற்கு உண்மை ஓரளவிற்கு புரியவர, அவர் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்கிறார். அர்ஜூன் மீது பிரச்சினை இருப்பது தெரியவர, தன்னுடைய மனைவிக்கும் அதை உணர வைக்கிறார். தொடர்ந்து கண்மூடித்தனமாக அர்ஜூனை நம்பிக்கொண்டிருந்த கோதைக்கு அவரது உண்மை முகம் தெரியவருகிறது.

Vijay TVs Thamizhum Saraswathiyum serial new promo makes fans thinking on it

அவர் கோதை இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலும் பல பதுக்கல்களை செய்வதும் தெரியவருகிறது. இதனிடையே, அசோசியேஷன் தேர்தலில் தான் தோற்க, அர்ஜூனின் சதித்திட்டங்களும் காரணம் என்ற உண்மையையும் தெரிந்துக் கொள்கிறார் கோதை. இதையடுதது தன் மகன் தமிழ் மீது தவறு இருக்காதோ என்ற எண்ணமும் அவருக்கு வருகிறது. ஆனாலும் தமிழை ஏற்க முடியாமல் தவிக்கிறார். இதனிடையே, சரஸ்வதி துவங்கும் புதிய நிறுவனத்திற்கு கோதையை அழைத்துவருகிறார் அவரது மாமனார்.

முன்னதாக சரஸ்வதிக்கு குழந்தை இல்லாத குறையை சுட்டிக்காட்டி, அர்ஜூனின் குடும்பத்தினர் அவரை அவமானப்படுத்த, கோதை அவருக்கு சப்போர்ட் செய்கிறார். இதனால் ராகினி கோபமடைகிறார். தன்னுடைய கணவரை தமிழ் கொலை செய்ய முயன்றதால்தான் சரஸ்வதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று அவர் பேச, குடும்பத்தினர் அனைவரும் ராகினியின் இந்த பேச்சை கண்டிக்கின்றனர். படித்த பெண்ணான அவர் இப்படி பேசுவது தவறு என்பதை சுட்டிக் காட்டுவதாக தற்போதைய ப்ரமோ வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X