Thamizhum Saraswathiyum: பாம்பைத்தான் வீட்டுக்குள்ள வச்சிருக்கீங்களே.. ஜோசியர் கிளப்பிய அச்சம்!
சென்னை: விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் தொடர் தொடர்ந்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
இந்தத் தொடரில் தன்னுடைய சதியால் தமிழ் மற்றும் சரஸ்வதியை குடும்பத்திடமிருந்து பிரிக்கிறார் அர்ஜூன்.
வீட்டை விட்டு வெளியேறும் தமிழ், தன்னுடைய சொந்த முயற்சியால் அடுத்தடுத்த நிறுவனங்களை துவங்குகிறார்.

பாம்பை வீட்டிற்குள் வைத்துள்ளதாக ஜோசியர் கிளப்பிய அச்சம்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தமிழும் சரஸ்வதியும் தொடர் காணப்படுகிறது. இந்தத் தொடரில் தமிழின் தங்கை ராகினியை திருமணம் செய்துக் கொண்டு மாமியார் வீட்டில் செட்டில் ஆகிறார் அர்ஜூன். கூடவே அவரது குடும்பத்தினரும் உள்நுழைகின்றனர். கோதை இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் அடுத்தடுத்த சதித்திட்டங்களை அரங்கேற்றுகிறார்.
இதுபோன்ற ஒரு சதித்திட்டத்தில் சிக்கும் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றனர். அர்ஜூனை கொலை செய்ய முயன்றதாக ஆட்களை செட் செய்து குடும்பத்தினரை நம்ப வைக்கிறார் அர்ஜூன். இந்த சம்பவத்தை தன்னுடைய மனைவி ராகினி பார்க்க நடத்தி முடிக்கிறார் அர்ஜூன். தன்னுடைய கணவனை கண்மூடித்தனமாக நம்பும் ராகினி, தன்னுடைய அண்ணன் தமிழை வெறுக்கிறார்.
தமிழ் அர்ஜூனை கொலை செய்ய முயன்றதாக கோதை உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் நம்பும் நிலையில், தான் வீட்டை விட்டு வெளியில் சென்று சிறப்பாக முன்னேறி காட்டுவேன் என்று சபதமிடும் தமிழ், அதை சிறப்பான நடத்தியும் காட்டுகிறார். அடுத்தடுத்த இரண்டு நிறுவனங்களை வாங்கும் தமிழ், அசோசியேஷன் எலெக்ஷனிலும் தன்னுடைய அம்மாவை எதிர்த்து நின்று வென்று காட்டுகிறார். தமிழை ஜெயிக்க விடாமல் செய்ய முயற்சிக்கும் அர்ஜூனின் முயற்சிகள் பலிக்காமல் போகிறது.

இந்நிலையில் தற்போது அர்ஜூனின் உண்மை முகம் கோதை உள்ளிட்டவர்களுக்கு தெரியவருகிறது. தன்னுடைய மகனை வெறுத்து ஒதுக்கிய கோதை தன்னுடைய கணவனின் முயற்சியால், அர்ஜூனின் கெட்ட நோக்கத்தை புரிந்துக் கொள்கிறார். இந்நிலையில், தன்னுடைய மகள் பெயரில் வீடு ஒன்றை எழுதி வைக்கும் சூழ்நிலையும் உருவாகிறது. இதையும் தன்னுடைய சதியின்மூலமாக தன்னுடைய மனைவியை கொண்டு நிறைவேற்றுகிறார் அர்ஜூன்.
இந்நிலையில், தன்னுடைய குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும் கெட்ட விஷயங்களுக்காக தன்னுடைய குடும்ப ஜோசியரிடம் கோதை மற்றும் அவரது கணவர் இருவரும் செல்கின்றனர். அதில் சோழி போட்டு பார்க்கும் ஜோசியர், சர்ப்பம் வந்துள்ளதாகவும் அவர்கள் வீட்டிலேயே பாத்பை வைத்துள்ளதாகவும் கூறுகிறார். அர்ஜூனை வைத்தே அவர் இவ்வாறு கூறுகிறார். அவருடைய இந்த வார்த்தைகள் கோதை மற்றும் அவரது கணவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதுகுறித்த தொடரின் புதிய ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











