Thamizhum Saraswathiyum serial: என்னது சொம்பு ஒரு வெயிட்டா.. கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க தமிழ்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் இடம்பெற்றுவரும் தமிழும் சரஸ்வதியும் தொடர் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகிறது.

இந்தத் தொடரில் அர்ஜூனின் சூழ்ச்சியால் கோதை குடும்பத்தினர் தங்களது சொத்துக்களை இழந்து வீதிக்கு வந்தனர்.

இதையடுத்து அவர்களின் மூத்த மகன் தமிழ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி அவர்களை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

Vijay TVs Thzmizhum Saraswathiyum serial this week promo makes everyone enjoying

சரஸ்வதியின் கர்ப்பத்தால் அதீத உற்சாகத்தில் தமிழ்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் இடம்பெற்றுவரும் தொடர் தமிழும் சரஸ்வதியும். இந்தத் தொடரில் கோதை இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கோதை மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கையை மையமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தன்னுடைய மகன், தன்னுடைய மருமகன் அர்ஜூனை கொலை செய்ய முயற்சி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்காமல் உண்மை என்று நம்பி, மகன் தமிழ் மற்றும் அவரது மனைவியை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார் கோதை.

இதையடுத்து அவர்களுக்குள் நடக்கும் பாசப்போராட்டங்களை மையமாக வைத்து இந்த சீரியலின் அடுத்தடுத்த காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. தன்னுடைய மகன்மீது மிகுந்த நம்பிக்கை இருந்தபோதிலும், தன்னுடைய மகள் ராகினி சொன்னதை நம்பி முதலில் தன்னுடைய மகனை வெறுக்கும் கோதை, பின்பு தன்னுடைய கணவன்மூலம் உண்மையை தெரிந்துக் கொள்கிறார். ஆனால் அதற்குள் அவரிடமிருந்து அர்ஜூன், சொத்துக்கள் அனைத்தையும் ஏமாற்றி நயவஞ்சமாக பெறுகிறார்.

இதனால் ஆத்திரமடையும் கோதை குடும்பத்தினர் தங்களது வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். தங்களின் சொத்துக்களை இழந்ததை காட்டிலும் தன்னுடைய மகள் ராகினி, அவளுடைய கணவன் அர்ஜூனை கண்மூடித்தனமாக நம்புவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறும் தன்னுடைய அம்மா, அப்பா, தம்பி அவரது மனைவி அனைவரையும் இக்கட்டான இந்த சூழ்நிலையில் இருந்து மீட்டு தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறார் தமிழ்.

இதனிடையே அர்ஜூனின் சூழ்ச்சியால் ராகினியின் வளைகாப்பிற்கு அனைவரும் குடும்பமாக செல்லும் சூழல் ஏற்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழை ஆட்களை வைத்து அடிக்க திட்டமிடுகிறான் அர்ஜூன். ஆனால் அந்த நேரத்தில் நீண்ட நாட்களாக கர்ப்பமாகாமல் அனைவரின் விமர்சனங்களுக்கும் ஆளாகிவந்த தன்னுடைய மனைவி சரஸ்வதியின் கர்ப்பம் குறித்து அறியவரும் நிலையில், அர்ஜூன் நினைத்த எந்த விஷயமும் நடக்காமல் போகிறது.

Vijay TVs Thzmizhum Saraswathiyum serial this week promo makes everyone enjoying

இதையடுத்து சரஸ்வதியை சோதித்து கர்ப்பத்தை உறுதி செய்யும் மருத்துவர், கவனமாகவும் வெயிட் தூக்காமல் இருக்கவும் சரஸ்வதிக்கு அறிவுறுத்துகிறார். இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், தன்னுடைய மனைவி சரஸ்வதி சொம்பில் தண்ணீர் எடுத்து வர, வெயிட் தூக்கக்கூடாது என்று அதை தமிழ் பிடுங்குவதாக காணப்படுகிறது. இதைப்பார்த்து குடும்பத்தினர் அனைவரும் சிரிக்கின்றனர். மேலும் சரஸ்வதி வீட்டு வேலைகள் செய்யக்கூடாது என்பதற்காக தானே அனைவருக்கும் தோசை சுட்டுத் தருகிறார் தமிழ்.

மேலும் சரஸ்வதி கடைக்குப் போகக்கூடாது என்று கூறுகிறார். ஆனால், தன்னுடைய கடையில் உள்ள சில வேலைகளை முடித்துவிட்டு வருவதாக சரஸ்வதி செல்ல, அங்கேயும் தமிழின் அட்ராசிட்டி தொடர்கிறது. அங்கேயும் சென்று, சரஸ்வதி வெயிட் தூக்கக்கூடாது என்று அனைத்தையும் வாங்கி வைக்கிறார். இதையடுத்து அவரை செல்லமாக அதட்டி சரஸ்வதி, அங்கிருந்து வெளியேற்றுவதாக இந்த வார பிரமோ காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X