Vijay TV serials: இந்த வார விஜய் டிவி சீரியல்களில் எது முதலிடம்.. 2வது இடத்தில் 2 சீரியல்களா!

சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை சீரியல்களுக்கு கொடுத்துவருவது தெரிந்த விஷயம்தான்.

இந்த சேனலின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தாலும் எப்போதும் சன் டிவியிடம் முதலிடத்தை விட்டுக் கொடுத்து வருகிறது.

Vijay TVs top 5 Serials list for the 40th week

அந்த வகையில் இந்த வாரமும் விஜய் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள் அதிகமான புள்ளிகளுடன் சிறப்பான இடங்களை தக்க வைத்தாலும் முதல் 5 இடங்களை சன் டிவி சீரியல்கள்தான் பிடித்துள்ளன.

விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள் பட்டியல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அடுத்தடுத்த சேனல்கள் நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை சீரியல்களுக்கு கொடுத்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியின் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை சேனலின் தொடர்களும் ரசிகர்களிடையே பெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் இந்த சேனலின் சீரியல்கள் டிஆர்பியில் முக்கியமான இடத்தை பெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த 40வது வாரத்தின் கிராம மற்றும் நகர்ப்புற டிஆர்பி ரேட்டிங்குகள் வெளியாகியுள்ளன. இதில் முதல் 5 இடங்களை சன் டிவியின் எதிர்நீச்சல், கயல், சுந்தரி, வானத்தை போல மற்றும் இனியா தொடர்கள் பிடித்துள்ளன. முதலிடத்தை பிடித்துள்ள எதிர்நீச்சல் தொடர், அந்த தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து, சமீபத்தில் மறைந்த மாரிமுத்துவின் மறைவிற்கு பிறகு மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

Vijay TVs top 5 Serials list for the 40th week

முன்னதாகவே மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் கேரக்டர் இந்தத் தொடருக்கு மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்திருந்தது. நெகட்டிவ் ஷேடில் இந்த கேரக்டர் அமைந்தாலும் அவரது இந்தாம்மா ஏய் போன்ற வசனங்கள், மற்றும் அதன் பிரயோகங்கள், அந்த கேரக்டருக்கு மிகப்பெரிய வரவெற்பை ரசிகர்களிடையே பெற்று கொடுத்தது. இந்நிலையில் தற்போது இந்த கேரக்டரில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி இணைந்துள்ளதும் இந்த தொடருக்கான அதிக வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதனிடையே விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை 6வது இடத்தை ஒட்டுமொத்த சீரியல்கள் வரிசையில் பெற்றுள்ளது. அடுத்த இடமான 7வது இடத்தில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் பெற்றுள்ளன. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள சீரியலின் இரண்டாவது சீசன், இந்த இடத்தை தக்க வைக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதனிடையே விஜய் டிவியின் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை வழக்கம் போல சிறகடிக்க ஆசை தொடர் பிடித்துள்ளது. இந்தத் தொடரின் முத்து, மீனா உள்ளிட்ட கேரக்டர்கள் மற்றும் நடிகர் சுந்தர்ராஜன் ஆகியோர் இந்த தொடருக்கான அட்ராக்ஷனாக இருந்து வருகின்றனர். இந்த தொடரின் கதைக்களம் எளிமையாக ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. இதனிடையே அடுத்ததாக இரண்டாவது இடத்தில் சேனலின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் பிடித்துள்ளன.

கடந்த வாரத்தில் பாக்கியலட்சுமி 2வது இடத்திலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூன்றாவது இடத்திலும் இருந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதால் அதிகமான கவனத்தை பெற்றுள்ளது. இதையடுத்து சேனலின் 3வது இடத்தில் ஆஹா கல்யாணம் தொடர், 6.82 புள்ளிகளை பெற்று நிலைபெற்றுள்ளது. இதையடுத்து இந்த வாரம் மகாநதி, மோதலும் காதலும் தொடர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X