Vijay: “தேதியே இல்லாம அறிக்கை..” தவெக தலைவர் விஜய்க்கு ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்த பிரபலம்!
சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் விரைவில் அரசியலிலும் அறிமுகமாகவுள்ளார். சினிமாவை போல அரசியலிலும் விஜய் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் விஜய் வெளியிட்ட அறிக்கையை வைத்து அவருக்கு ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்துள்ளார் பிரபலம் ஒருவர்.
விஜய்க்கு ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்த பிரபலம்: கோலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வரும் விஜய், சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இனி அரசியல் தான் எனது எதிர்காலம் என கூறிய அவர், இனி படங்களில் நடிக்கப் போவதில்லை எனவும் அறிக்கையின் வாயிலாக தெரிவித்திருந்தார். இதனால் தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி அரசியல் களத்திலும் பரபரப்பாக காணப்படுகிறது.

தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய், இதுதவிர இன்னும் ஒரு படத்தில் மட்டும் கமிட்டாகியுள்ளார். அதன்படி தளபதி 69 படப்பிடிப்பு முடிந்ததும் உடனே 2026 அரசியலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனை பிப்ரவரி 2ம் தேதி விஜய் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.
பிரபலங்கள் தவிர்த்து பொதுமக்கள், மாணவர்கள், ரசிகர்கள் என பல தரப்பில் இருந்தும் விஜய்க்கு கணிசமான ஆதரவு கிடைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் விஜய். அதில், "தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

விஜய்யின் இந்த நன்றி அறிக்கை பலரது கவனத்தை ஈர்த்தது. முக்கியமாக நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் என குறிப்பிட்டிருந்ததும் விவாதத்துக்கு உரியதாக மாறியது. இந்நிலையில் விஜய்யின் அறிக்கை குறித்து வலைப்பேச்சு பிஸ்மி விமர்சனம் செய்துள்ளார். அதில், "தம்பி விஜய் கவனத்திற்கு, அறிக்கை அல்லது கடிதம் அனுப்பும் போது அதில் தேதியை குறிப்பிடணும்" என ட்வீட் செய்துள்ளார்.
அதாவது விஜய் தனது அறிக்கையில் தேதியே குறிப்பிடவில்லை. இதனை சுட்டிக் காட்டும் விதமாக விஜய்க்கு ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்துள்ளார் வலைப்பேச்சு பிஸ்மி. இதனை எதிர்பார்க்காத விஜய் ரசிகர்கள் வலைப்பேச்சு பிஸ்மிக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதேநேரம் இனி வெளியாகும் அறிக்கைகளில் விஜய் கண்டிப்பாக தேதி போடுவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











