‘வாரிசு‘ மூன்றாவது லுக்.. பைக்கில் வேறலெவல் மிரட்டல்.. குஷியில் ரசிகர்கள்!

சென்னை : விஜய்யின் பிறந்த நாள் ட்ரீட்டாக வாரிசு படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய், தெலுங்கு பட இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

கோட் சூட்டுடன்

கோட் சூட்டுடன்

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு 'வாரிசு' என பெயரிடப்பட்டுள்ளது. விஜய் கோட் சூட்டுடன் அமர்ந்திருக்கும் மாஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப கதை

குடும்ப கதை

தமிழ்,தெலுங்கு என இருமொழியில் வெளியாக உள்ள இப்படத்திற்கு தமிழில் வாரிசு என்றும் தெலுங்கில் வாரிடு என்றும் பெயர்வைக்கப்பட்டுள்ளது. இப்படம் குடும்ப கதை என்பதால், படத்திற்கு வாரிசு என்ற டைட்டில் பொருத்தமாக உள்ளதென்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுவரை இல்லாத தோற்றத்தில் நேற்று வெளியான வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

செகண்ட் லுக்

செகண்ட் லுக்

தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வான்ட்டடாக இருக்கும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இது ஒரு குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என ஏற்கனவே இயக்குனர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விஜய்யின் பிறந்தநாளான இன்று காலை 11 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் குழந்தைகளுடன் செம ஜாலியாக உள்ளார்.

பைக்கில் மிரட்டலாக

பைக்கில் மிரட்டலாக

தற்போது வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் பைக்கில் மிரட்டலான லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். சற்று முன் வெளியான அந்தபோஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X